அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு கதவில் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.. இந்து மக்கள் கட்சி பதிவிட்ட போட்டோஷாப் படம் !

பரவிய செய்தி

அரவிந்த் கெஜ்ரிவால் குடியிருப்பு !

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

” தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்திற்கு வரி நீக்கம் செய்வதற்கு பதிலாக விவேக் அக்னிஹோத்ரி ஏன் படத்தை யூடியூபில் வெளியிடக்கூடாது என  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் இருக்கும்போதே பாஜகவைச் சேர்ந்தவர்கள் உள்ளே வந்து இப்படி நடந்துள்ளது, தேர்தல் தோல்வியால் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய முயற்சி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக நடத்திய போராட்டத்தில் வீட்டின் கதவில் ” தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என காவி நிறத்தில் பெயின்ட் அடித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சி ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது.

உண்மை என்ன ?

Archive link 

இந்து மக்கள் கட்சி பகிர்ந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள @AdvAshutoshBJP என ட்விட்டர் ஐடி-யை வைத்து தேடுகையில், பாஜகவைச் சேர்ந்த  வழக்கறிஞர் அஷுதோஷ் துபே எனும் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதை விவேக் அக்னிஹோத்ரி தன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Archive link 

ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் என்பவர் ட்விட்டரில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடும் போது கதவில் காவி நிற பெயின்ட் அடிக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதில், காஷ்மீர் ஃபைல்ஸ் என ஏதும் இல்லை.

Twitter link 

மேலும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி ராகவ் குப்தா தன் ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் மீது பாஜகவினர் தாக்குதலை நடத்தியதாகக் கூறி பதிவிட்ட புகைப்படங்களில் கதவில் காவி நிற பெயின்ட் மட்டுமே உள்ளது. அந்த புகைப்படத்தில், ” தி காஷ்மீர் ஃபைல்ஸ் ” என எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் கதவில் ” தி காஷ்மீர் ஃபைல்ஸ் ” என எழுதப்பட்டதாக பரவும் புகைப்படம் போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader