வேல் யாத்திரைக்கு அனுமதி தராவிட்டால் தீ குளிப்பேன் என அர்ஜுன் சம்பத் கூறியதாக வதந்தி!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரையை தடை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் யாத்திரைக்கு அனுமதி இல்லை என அரசு தரப்பில் பதில் அளித்தனர்.
இதையடுத்து, வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தீ குளிப்பேன் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக சமூக வலைதளங்களில் ஓர் தகவல் பரவத் துவங்கியது. அதைக் கிண்டல் செய்து பலரும் பதிவிட்டு வருவதை பார்க்க முடிந்தது.
ஆனால், அர்ஜுன் சம்பத் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் தீ குளிப்பேன் என எங்கும் கூறவில்லை. அவர் கூறாத கருத்தை கூறியதாக கிண்டல் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
FAKE NEWS ALERT.
It’s BJP doing Vel Yathra not IMK. https://t.co/ADCOtVH4LA
— Indu Makkal Katchi – இந்து மக்கள் கட்சி ( Off ) (@Indumakalktchi) November 5, 2020
இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” இது பொய்யான தகவல். வேல் யாத்திரை பிஜேபி மேற்கொள்வது, இந்து மக்கள் கட்சி அல்ல ” எனக் கூறியுள்ளார்கள்.
நவம்பர் 6-ம் தேதி (இன்று) வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் திருத்தணி சென்றுள்ளனர். தடையை மீறி சென்றதால் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளனர்.