விவசாயிகள் போராட்டத்தை தடுக்க இராணுவம் களமிறங்கியதாக வைரலாகும் வீடியோ| உண்மை என்ன ?

பரவிய செய்தி

இந்திய இராணுவம் விவசாயிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டால், இந்த நாட்டின் உண்மையான எஜமானர்கள் யார் என்பதில் எங்களுக்கு அனைத்து சந்தேகங்களும் நீங்கிவிடும்.

Facebook link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருக்கும் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான வாகனங்களைப் பின்தொடர்ந்து ஒருவர் காரில் வீடியோ எடுத்துக் கொண்டே செல்லும் வீடியோவில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை முறியடிக்க இந்திய ராணுவம் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறுகிறார்.

Advertisement

Archive link 

இந்த 1.13 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. இந்திய ராணுவத்தை விவசாயிகளுக்கு எதிராகப் பயன்படுத்தினால் இந்த நாட்டின் உண்மையான எஜமானர்கள் யார் என்கிற சந்தேகம் நீங்கி விடும் என பிரதமர் மோடி, அம்பானி, அதானியை விமர்சித்து தன் முகநூல் பக்கத்தில் பியூஸ் மனுஷ் 40 நொடிகள் கொண்ட வீடியோவை பதிவிட்டு உள்ளார். இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

Advertisement

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க இந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் கூற்று தவறான எனப் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது. PIB-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” வைரலாகும் கூற்றை மறுத்து, இந்த வீடியோ ராணுவத்தின் வழக்கமான நடவடிக்கையாகும் என்றும், இதற்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link 

வைரல் செய்யப்படும் வீடியோவில் செல்லும் வாகனத்தை இயக்குபர்களை தவிர ராணுவ வீரர்கள் இருப்பது தென்படவில்லை என்பதை தெளிவாய் காணலாம். லாரிகள், கார்கோஸ் மற்றும் கனரக பீரங்கிகள் மட்டுமே செல்வதை வீடியோவில் காண முடிகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு, ” டெல்லியைச் சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு எதிராக இராணுவத்தை களமிறக்கியதாக வைரலாகி வரும் வீடியோ போலியானது. அந்த வீடியோவில் காணப்பட்ட இராணுவப் படை உண்மையில் பீரங்கிகளை கொண்டு சென்ற ஒரு பொதுவான போக்குவரத்து மற்றும் கான்வாயில் பீரங்கிகள் மட்டுமே இருந்தன, இராணுவ வீரார்கள் உடன் டிரக் செல்லவில்லை ” என ஃபேக்ட் கிரெசென்டோ எனும் ஆங்கில உண்மை கண்டறிதல் இணையதளத்திற்கு பதில் அளித்ததாக வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இராணுவ வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை தடுக்க கொண்டு செல்லப்படுவதாக வைரலாகும் தகவலை பாதுகாப்பது அமைச்சகம் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. வைரலாகும் வீடியோவில், பீரங்கிகள் மற்றும் டிரக்குகள் மட்டுமே பயணிக்கின்றன இராணுவ வீரர்கள் தென்படவில்லை என காண முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button