அர்னாப் பேண்டிலேயே சிறுநீர் கழித்ததாக பரப்பப்படும் வதந்தி புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ரிபப்ளிக் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசால் கைது செய்யப்பட்டது தொடர்பான செய்திகளும், மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், போலீஸ் விசாரணையில் அர்னாப் கோஸ்வாமி தன் பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்ததாக அவரின் புகைப்படம் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் அதிகம் வைரல் செய்யப்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு போலியான புகைப்படம் என எளிதாக அறிய முடிந்தாலும், அரசியல் சார்ந்து இப்புகைப்படம் பகிரப்பட்டு வருவதை காண முடிந்தது.
அர்னாப் கோஸ்வாமியே உச்சா போனா.!
கிஷோர் கே ஸ்வாமி…??? 😷 pic.twitter.com/YYjS5A0YCp
— Justin (@Justinjmjjustin) November 5, 2020
கடந்த ஏப்ரல் மாதமே காவல்துறையின் 11 மணி நேர விசாரணைக்கு பிறகு அர்னாப் கோஸ்வாமி பேண்டில் சிறுநீர் உடன் இருந்ததாக இப்புகைப்படம் வைரல் செய்யப்பட்டு இருக்கிறது. அதே புகைப்படத்தை பயன்படுத்தி தற்போதும் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன ?
கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் நிகழ்ந்த இந்து சாமியாரின் கொலை வழக்கு தொடர்பாக மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அர்னாப் பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, நாக்பூர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
வழக்கின் விசாரணைக்காக அர்னாப் நேரில் ஆஜரானார். 12 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியே வந்த அவர் பேட்டி அளித்து இருந்தார். ஏப்ரல் 28-ம் தேதி bestmediainfo.com எனும் இணையதளத்தில் வெளியான செய்தியில் அர்னாப் காவலர்கள் உடன் இருக்கும் உண்மையான புகைப்படம் இடம்பெறு இருக்கிறது. அதில், ஃபோட்டோஷாப் செய்து கிண்டலாக வைரல் செய்து வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், கடந்த ஏப்ரல் மாதம் காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி வந்த போது எடுக்கப்பட்ட அர்னாப் கோஸ்வாமி புகைப்படத்தில் ஃபோட்டோஷாப் செய்து பேண்டில் சிறுநீர் கழித்ததாக வதந்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.