படத்தில் இருப்பது அர்னால்ட் மகனா ?

பரவிய செய்தி

அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு. அர்னால்ட் மற்றும் அவர் மகனின் புகைப்படம்

மதிப்பீடு

சுருக்கம்

படத்தில் இருப்பவர் அர்னால்ட் தோற்றத்தில் இருப்பதால் அவரின் மகன் என பலரும் நினைத்து விட்டனர்.

விளக்கம்

calum von moger ஆஸ்திரேலியாவை சேர்ந்த 28 வயதான body builder ஆவார். ஸ்டீவ் லீ ஜோன்ஸ் என்பவர் இயக்கும் ”  Bigger ” என்ற திரைப்படத்தில் அர்னால்ட் ஆக நடிக்கிறார்.

Advertisement

2018-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட bigger படத்தில் அர்னால்ட் ஹாலிவுட் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக அவரின் இளமை கால body builder பகுதியே கதைக் கரு. இதில், நடிப்பது பெருமையாக இருப்பதாக calum von moger கூறியுள்ளார்.

calum von mogerக்கு அர்னால்ட் பயிற்சி வழங்குவது போன்ற புகைப்படங்கள் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

2017 ஜூலை 31-ம் தேதி calum von moger அர்னால்ட் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அர்னால்ட்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார். அப்படங்களே தற்போது தவறான தகவலுடன் பதிவிடப்படுகிறது.

Advertisement

2017 அக்டோபர் 19-ம் தேதி இன்ஸ்டாகிராமில், ” ஒரு நாள் நான் அர்னால்ட் கதாப்பாத்திரத்தில் நடிப்பேன் என சில ஆண்டுகளுக்கு முன்பு பலரும் கூறினார்கள். அது தற்போது நடந்துள்ளது. Bigger என்ற திரைப்படத்தில் schwarzenegger கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளேன் “ என பதிவிட்டு இருந்தார்.

அர்னால்ட் கதாப்பாத்திரத்தில் நடிப்பவரை உருவ ஒற்றுமை சிறிது இருப்பதால் மகன் என்று பலரும் கருத்து கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  எனினும், அர்னால்ட் மற்றும் calum von moger-க்கும் எந்த உறவு முறையும் இல்லை.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button