பாலியல் வன்புணர்வை சிறிய நிகழ்வு என்றாரா ஜெட்லி ?

பரவிய செய்தி
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாலியல் வன்புணர்வு போன்ற சின்ன நிகழ்வுகளால் நாட்டின் சுற்றுல்லா பாதிக்கப்படுகிறது என்று சிறுமி ஆஷிஃபா வழக்கில் கருத்து தெரிவித்தார் .
மதிப்பீடு
சுருக்கம்
அவர் சொன்ன கருத்து உண்மை ஆனால் அது சில வருடங்களுக்கு முன் சொன்னது . இந்த விவகாரத்தில் அவர் கருத்து வெளியிடவில்லை.
விளக்கம்
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி , டில்லியில் நடந்த போன்ற சின்ன நிகழ்வுகளால் நாட்டின் சுற்றுல்லா பாதிக்கப்படுகிறது, அதனால் பில்லியன் டாலர்கள் இழக்கிறோம் என்று சொன்னது உண்மையே . ஆனால் அப்போதே கடும் எதிர்ப்பு கிளப்பியது . அந்தக் கருத்துக்கு நிர்பயா தாயார் கடும் கண்டனம் தெரிவித்தார் .
அவர்கள் அரசியல் லாபத்துக்கு நிர்பயா பெயரை பயன்படுத்தினார்கள் , இப்போது சிறிய நிகழ்வு என்கிறார்கள் . என்று அதாங்கப்பட்டார் நிர்பயா தாய் .
ஆசிஃபா வழக்கைப் பற்றி அவர் பேசவில்லை , எனினும் இப்படி பேசியது தவறு எனக் கண்டனம் வருகிறது .
அப்போதே இதற்காக வருத்தம் தெரிவித்த ஜெட்லி , அப்படி சொல்வது என் நோக்கம் இல்லை என்று மறுப்புத் தெரிவித்தார் .
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.