நான் கொல்லப்படலாம்..! ஆஷிஃபா வழக்கின் வழக்கறிஞர் அச்சம்.

பரவிய செய்தி

நான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் , கற்பழிக்கப்படலாம் என ஆஷிஃபா வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் தீபிகா ராஜாவத் அச்சம் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய அளவில் #Justice for Asifa  என்று ஆஷிஃபா குழந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்கள், பேரணிகள், சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிர்வது என பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Advertisement

எனினும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் போலீஸ் அதிகாரிகள், அதுமட்டுமின்றி இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை கதுவா நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக சென்ற குற்றப் புலனாய்வு அதிகாரிகளை வழக்கறிஞர்களே தடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து, காஷ்மீரின் கதுவா பகுதியில் பல நாட்கள் கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியின் வழக்கில் ஆஷிஃபா குடும்பத்திற்கு ஆதரவாக தீபிகா ராஜாவத் என்ற பெண் வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில், நான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம், நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம். தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக கூறியுள்ளார் வழக்கறிஞர் தீபிகா.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தீபிகா ராஜாவத், “ நான் இன்னும் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன் என்று தெரியவில்லை. நான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படலாம், நான் கொலை செய்யப்படலாம், நான் தாக்கப்படலாம். நேற்று கூட, நாங்கள் உன்னை மன்னிக்க மாட்டோம் என்று கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். நான் ஆபத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தீபிகா ராஜாவத், நான் ஜம்மு பார் அசோசியேஷனில் உறுப்பினராக இல்லை. ஆனால், ஜம்மு பார் அசோசியேஷன் தலைவர் பி.எஸ். ஸ்லதியா இவ்வழக்கில் என்னை ஆஜராக கூடாது என்று மிரட்டியதாக கூறியிருந்தார். எனினும், நான் அவருக்கு பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், நாம் யாருக்கும் அஞ்சவில்லை, ஆனால் நான் பாதுகாப்பாக இல்லை என்று உணர்கிறேன். நீதி வேண்டி போராடும் எனக்கு வழக்கறிஞர்கள் அழுத்தம் தருகின்றனர். எனினும், ஆஷிஃபா வழக்கில் நான் தொடர்ந்து போராடுவேன். போலீஸ் விசாரணையில் முழு நம்பிக்கை உள்ளது என்றும் தீபிகா ராஜாவத் கூறியுள்ளார்.

தீபிகா குற்றச்சாட்டைத் தொடர்ந்து பார் கவுன்சில் கூறுகையில், “ ஏப்ரல் 3-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆகையால், எந்தவொரு வழக்கிலும் ஆஜராக வேண்டாம் ” என்று கூறியதாக தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர்கள் ஒன்றுக்கூடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்து போராடியது, வழக்கில் ஆஜராக வேண்டாம் என்று ஜம்மு பார் கவுன்சில் மிரட்டுவதையும் தாண்டி தனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என அறிந்தும் சிறுமி ஆஷிஃபா வழக்கில் போராடத் தயாராக உள்ளார் தீபிகா ராஜாவத். இங்கு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என்பதை விட நீதி வேண்டி போராடும் மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது.

கதுவா சிறுமி வழக்கை ஏப்ரல் 28-ம் தேதி ஒத்திவைத்துள்ளார் கதுவா நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி. தனது உயிர்க்கும், ஆஷிஃபா குடும்பத்திற்கும் அச்சறுத்தல் இருப்பதாகவும், எனவே பாதுக்காப்பு வழங்க வேண்டும் வழக்கறிஞர்  தீபிகா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஆஷிஃபா வழக்கின் சூழ்நிலையை உணர்ந்து சிறுமியின் குடும்பத்திற்கும், அந்த வழக்கை வழிநடத்தும் வழக்கறிஞருக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button