சட்டசபையில் ஜெயலலிதா சேலை கிழிப்பு நாடகம் என ஜெயக்குமார் கூறியதாக போலிச் செய்தி !

பரவிய செய்தி
சட்டசபை சேலை கிழிப்பு நாடகத்தை இன்னமும் தத்ரூபமாக எடுத்திருக்கலாம். புரட்சித்தலைவி அம்மாவின் நடிப்போடு ஒப்பிடுகையில் இது ஒரு மாற்று குறைவுதான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மதிப்பீடு
விளக்கம்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “தலைவி ” வெளியான பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ” சட்ட சபையில் ஜெயலலிதா சேலை கிழிப்பு நாடகத்தை இன்னும் தத்ரூபமாக எடுத்திருக்கலாம் என்றும், ஜெயலலிதாவின் நடிப்போடு ஒப்பிட்டால் குறைவு தான் ” எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் உடைய போலியான நியூஸ் கார்டு பரப்பப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை அதிமுகவினரே நாடகம் எனக் கூற வாய்ப்பில்லை, இது பார்ப்பதற்கு போலியாக எடிட் செய்யப்பட்ட செய்தி அறிந்து கொள்ள முடிகிறது. எனினும், முன்னாள் அமைச்சரே நாடகம் என ஒப்புக் கொண்டதாக பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகிறார்கள்.
நியூஸ் 7 தமிழ் சேனலில், ” தலைவி குறித்து தொண்டர் ! தலைவி திரைப்படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு: எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதிப்பு போன்று உள்ள காட்சியை நீக்க வலியுறுத்தல் ” என்ற நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : கங்கனா ரணாவத் என் இளமை நரம்பை முறுக்கேற்றி விட்டார் என ஜெயக்குமார் கூறினாரா ?
இதேபோல், தலைவி படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து என எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டை வைரல் செய்தனர்.
முடிவு :
நம் தேடலில், தலைவி திரைபடத்தில் சட்டசபை சேலை கிழிப்பு நாடகத்தை இன்னமும் தத்ரூபமாக எடுத்திருக்கலாம். புரட்சித்தலைவி அம்மாவின் நடிப்போடு ஒப்பிடுகையில் இது ஒரு மாற்று குறைவுதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரப்பப்படும் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.