மருத்துவமனைகளில் நோய்களை குணப்படுத்த ஜோதிடர்களா ?

பரவிய செய்தி
மத்தியப்பிரதேச மாநிலத்தின் அரசாங்கம் நோய்களை குணப்படுத்த ஜோதிடர்களை நியமிக்க உள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
சமூகவலைதளங்களில் மத்தியப்பிரதேச அரசு வெளிப்புற நோயாளிகள் துறைக்கு ஜோதிடர்களை நியமித்ததாக கூறி பரவிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து , இது எள்ளிநகையாட கூடிய சிந்தனை என்று சுகாதார துறை அமைச்சர் கூறியுள்ளனர் .
மத்தியப்பிரதேசத்தின் சுகாதார துறை அமைச்சர் ருஷ்டம் சிங்க், அரசு இதுபோன்ற எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இதனால் எந்த பிரச்சனையும் எற்படவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார் .ஊடகங்கள் இது போன்ற செய்திகளை கூறுவதற்கு முன் உண்மையா என்று அரசாங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளவும் என்றார் .
மகரிஷி பதஞ்சலி சன்ஷ்க்ரிட் சன்ஸ்தான் நிறுவனம் ஜோதிடர்கள், குறி சொல்பவர்களிடம் நோய்களில் இருந்து விடுபட அறிவுரை பெறுங்கள் என்று அறிவித்தார்கள் என்ற செய்தி பரவிய பிறகே அமைச்சர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சுகாதார துறையின் முதன்மை செயலாளர் காரி சிங்க் இது ஒரு நடைமுறைக்கு சாத்தியமில்லாத முறை இது முற்றிலும் தவறான செய்தி என்றும் கூறியுள்ளார் .
சன்ஸ்தான் துணை இயக்குனர் கூறுகையில், நாங்கள் முன்பே யோகா மையங்கள் மூலம் மக்களுக்கு நோய்களில் இருந்து விடுபட அறிவுரைகள் வழங்கிக் கொண்டு இருக்கின்றோம் . மேலும் ஜோதிடம், வாஸ்து மூலம் அறிவுரைகள் கூறுகிறோம். ஆனால் அரசாங்கம் இது போன்ற முடிவுகளை எடுக்கவில்லை என்றார் .
உத்திரப்பிரதேசத்தில் ?
மருத்துவமனைகளில் ஜோதிடர்களை பணியமர்த்த உத்தரப்பிரதேச அரசு முடிவெடுத்து இருப்பதாக தற்பொழுது மீண்டும் இந்த செய்தி பரவத் துவங்கி உள்ளது. 2017-ல் மத்தியப்பிரதேச மாநிலத்தில் வெளிப்புற நோயாளிகளுக்கு ஜோதிடர்களை பணியமர்த்த உள்ளதாக பரவிய செய்தியே உத்திரப்பிரதேசம் என மீண்டும் பரவி வருகிறது.
உத்திரப்பிரதேச அரசு அவ்வாறான எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை, அது தொடர்பாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
இதுபோன்ற செய்திகள், மீம்களில் நகைச்சுவையாக இருந்தாலும் தவறான செய்திகளை மக்கள் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.