அத்தி வரதரை ஜூலை 14,15,16-ம் தேதிகளில் மக்கள் காண இயலாது என வதந்தி !

பரவிய செய்தி

காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க ஜூலை 14,15,16-ம் தேதிகளில் மக்கள் வர வேண்டாம்…அன்று CM , PM , judges, MP , MLA என VIP மற்றும் VVIP ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது..தயவு செய்து பகிரவும்..வெளியூர் மக்கள் வந்து ஏமாற வேண்டாம். மற்ற நாட்களில் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.

மதிப்பீடு

விளக்கம்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீருக்குள் இருந்து அத்தி வரதரின் வைபவம் நடைபெறும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நீருக்குள் இருக்கும் அத்தி வரதரின் சிலை வெளியே கொண்டு வந்து மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதால் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.

Advertisement

அத்தி வரதரை காண தமிழகம் முழுவதிலும் உள்ள மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையில், ஜூலை 14,15,16-ம் தேதிகளில் அத்தி வரதரை காண முதலமைச்சர், பிரதமர், குடியரசுத்தலைவர் உள்பட விஐபிக்களின் வருகை இருப்பதால் மக்கள் செல்ல வேண்டாம் மை அத்தி வரதர் எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அந்த ஃபார்வர்டு செய்தி அதிகம் வைரலாகி வருகிறது.

ஆனால், அப்படியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பதே உண்மை. இதுபோன்ற வதந்திகள் வலம் வரும் நிலையில், வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், வதந்திகளை பரப்புவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இன்று ஜூலை 14-ம் தேதி அத்தி வரதரை காண மக்கள் சென்று பார்த்து விட்டும் வருகின்றனர். ஆகையால், மக்கள் வதந்திகளை நம்பி பகிர வேண்டாம்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Advertisement

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close