அத்திக் அகமதுவைக் கொன்றவர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ எனக் கோஷமிடவில்லை எனப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
அதிக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்புவது போன்ற போலி வீடியோவை பலர் பரப்பி வருகின்றனர். அங்கு கோஷங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை.
மதிப்பீடு
விளக்கம்
உத்திரபிரதேசத்தின் மாஃபியா டான், அரசியல்வாதியான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவு கட்டாய மருத்துவப் பரிசோதனைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தொலைக்காட்சி நிருபர்கள் போல் நடித்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்திலேயே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் தற்போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடுதாக உள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வலதுசாரி ஆதரவாளர்கள் பலர் இது போலி வீடியோ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/sansbarrier/status/1647311588012216320
மேலும் அப்பதிவுகளில் “அத்திக் கூட்டாளிகள் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்புவது போன்ற போலி வீடியோவை பலர் பரப்பி வருகின்றனர். அங்கு கோஷங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
Fake News Alert –
Several people are circulating fake video in which three accused of Atiq’s murder are chanting Jai Shri Ram slogans.
NO SLOGANS WERE RAISED.
BEWARE— News Arena India (@NewsArenaIndia) April 15, 2023
உண்மை என்ன?
2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவான ராஜு பால் பட்டப்பகலில் ‘அத்திக் கும்பலால்’ (Atiq’s gang) கொலை செய்யப்பட்டார். இதற்கு சாட்சியாக இருந்த பாஜக பிரமுகரான உமேஷ் பாலும் பிப்ரவரி 2023ல் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அத்திக் அகமது, அவரது மகன் ஆசாத் அகமது, அவரது உதவியாளர் குலாம் மற்றும் அவரது சகோதரர் அஷரப் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த என்கவுன்டரில் ஆசாத் அகமது மற்றும் குலாம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஏப்ரல் 15 அன்று, அரசியல்வாதியாக மாறிய மாஃபியா டான் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷரப் ஆகியோர் போலீஸ் காவலில் இருந்தபோது ஆசாமிகள் சிலரால் ஊடகங்கள் முன்பு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய பதிவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த போது, பகிரப்பட்ட வீடியோ காட்சிகளில் “ஜெய் ஸ்ரீராம்” என்ற கோஷங்கள் கேட்கப்படுகின்றன என்று THE WIRE தன்னுடைய கட்டுரையில் தெரிவித்துள்ளது.
HINDUSTAN TIMES தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வீடியோவின் தலைப்பு “அதிக் அகமதுவின் கொலையாளிகள் கொலைக்குப் பிறகு கேமராவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டதால் பிடிபட்டனர்;” என்று உள்ளது. அத்திக்கைக் கொன்ற உடனேயே தாக்குதல் நடத்தியவர்கள் அவ்வாறு கோஷம் எழுப்பியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் மற்றொரு வீடியோவை THE TIMES OF INDIA கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதில் கொலைக்குப் பிறகு கொலையாளிகள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிடுவதை உறுதி செய்துள்ளது.
ABP NEWS தன்னுடைய யூடியூப் பக்கத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிடும் காட்சிகளைக் கொண்ட வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அவர்கள் போலீஸாரிடம் சிக்குவதையும் காணமுடிகிறது.
TIMES NOW தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘அத்திக் அகமதுவின் கொலையாளிகள் கேமரா பதிவில் சிக்கி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டனர்.’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் TIMES NOW செய்திக் கட்டுரையிலும் கொலை செய்த பிறகு ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பும் சம்பவத்தின் வீடியோவைக் காணலாம்.
News Tak தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பேட்டியில், துப்பாக்கிச்சூடு நடத்தும் போது கொலையாளிகள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறுவதைக் கேட்க முடிகிறது.
Atiq Ahmed और Ashraf की हत्या के मामले पर फूटा चश्मदीदों का गुस्सा, कहा: ये सोची समझी साजिश थी।#AtiqAhmed #Ashraf #PrayagrajNews pic.twitter.com/X5OTgAMtJB
— News Tak (@newstakofficial) April 15, 2023
முடிவு:
நம் தேடலில், அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரபைக் கொன்ற பிறகு கொலையாளிகள் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் எழுப்பவில்லை எனப் பரவும் சமூக வலைத்தளப்பதிவுகள் தவறானது. கொலையாளிகள் உண்மையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
ஆதாரம்
atiq-ahmed-brother-shot-dead-in-up
Atiq Ahmed’s killers caught chanting ‘Jai Shri Ram’ on cam after murder; Posed as media
ringed-by-cops-jailed-gangster-atiq-brother-shot-dead-on-way-to-check-up-in-prayagraj
Video Emerges When Atiq Ahmad And His Brother Shot Dead in Police Custody in Prayagraj | VIDEO