ஏ.டி.எம்களில் Cancel பட்டனை இருமுறை அழுத்தி தகவல் திருட்டை தடுக்கலாமா ?

பரவிய செய்தி

ஏ.டி.எம் மெசின்களில் கார்டு செலுத்தி பணம் எடுப்பதற்கு முன்பாக cancel பட்டனை இரு முறை அழுத்தினால் உங்களின் PIN  நம்பர் திருடப்படுவது மற்றும் கணக்கின் தகவல்கள் திருடப்படுவதைத் தடுக்கலாம் என RBI  தெரிவித்து உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

ஏ.டி.எம் மெசின்களில் நாம் பணம் எடுக்கும் முன் Cancel பட்டனை இருமுறை அழுத்தினால் PIN நம்பர் திருடுவதை தடுக்கலாம் எனக் கூறுவது தவறான தகவலாகும். அவ்வாறு எந்தவொரு அறிவுரையையும் RBI  வழங்கவில்லை.

விளக்கம்

ஏ.டி.எம் கார்டுகளின் மூலம் வங்கித் தகவல்கள் திருடப்பட்டு நம் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்படுவதை அனைவரும் அறிந்து இருப்போம். அதை வைத்து பல தவறான அறிவிவுரைகள் சமூக வலைத்தளத்தில் பகிர்வதையும் பார்க்க முடிகிறது.

ஏ.டி.எம் மெசின்களில் கார்டுகளைப் பொருத்தி பணம் எடுக்கும் நேரத்தில் நமக்கே தெரியாமல் நம் கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது. ஆகையால், ஏ.டி.எம் கார்டுகளைப் மெசின்களில் பொருத்தும் முன்பு இருமுறை cancel பட்டனை அழுத்தியப் பின்னர் கார்டை செலுத்துமாறு வங்கியின் சார்பில் தெரிவித்ததாக கூறுவது முற்றிலும் தவறான தகவல்.

Advertisement

இதைப்பற்றி, RBI வங்கி, குற்றப்பாதுகாப்பு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. Cancel பட்டனை இருமுறை அழுத்துவதால் PIN நம்பர் டைப் செய்யும் PAD-ல் இருக்கும் Setup-ஐ மாற்றி விடலாம் என்பதும் தவறான தகவலே.

ஏ.டி.எம் PIN நம்பர் பணத்தை திருடும் பிற முறைகள் பற்றியும், தடுப்பதைப் பற்றியும் காண்போம்.

 • ஏ.டி.எம்களில் கார்டு Skimmer என்ற கருவியை கார்டு செலுத்தும் பகுதியில் பொருத்தி கணக்கின் விவரங்களை திருடுகின்றனர்.
 • Lebanese loop “ எனும் சிறிய கருவியை கார்டு பொருத்தும் பின் பகுதியில் பொருத்தி தகவலைத் திருடுகின்றனர்.
 • ஏ.டி.எம்களில் PIN நம்பரை டைப் செய்யும் Pad-க்கு மேலே ரகசிய கேமராக்களை பொருத்தி PIN நம்பர் உள்ளிட்ட தகவல்களை திருடுகின்றனர்.
 • அருகில் இருப்பவரிடம் உதவி கேட்கும் பொழுது உங்களின் கார்டு விவரங்களை அறிந்து கொள்வர் அல்லது நீங்கள் PIN நம்பரை டைப் செய்யும் பொழுது பின்னிருந்து பார்க்கலாம்.
 • பணம் எடுத்த பிறகோ அல்லது பணம் வரவில்லை என PIN நம்பரை டைப் செய்து விட்டு cancel செய்யாமல் சென்றால் எளிதாக பணத்தை திருடி விடுவர். ஏ.டி.எம் விவரங்களையும் அறிந்துக் கொள்வர்.
 • உண்மையை போன்றே இருக்கும் போலியான இணையதளங்கள், செயலியைப் பயன்படுத்தும் பொழுது உங்களின் ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்படலாம்.
 • பொது இடங்களில் இருக்கும் இலவச Wi-Fi, மால்வர் தாக்குதல் மூலம், வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து ஏ.டி.எம் விவரங்களை கேட்பது போன்ற ஏமாற்று வேலையின் மூலம் கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது.

எப்படி தடுக்கலாம் ?

Advertisement
 • ஏ.டி.எம் மெசின்களில் பணம் எடுக்கும் முன் அப்பகுதியை சுற்றி பார்க்கவும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலேயே PIN நம்பர் உள்ளிட்டவை திருடப்படுகிறது. அதிக பயன்பாட்டில் உள்ள ஏ.டி.எம்களை பயன்படுத்துங்கள்.
 • PIN நம்பரை கார்டு, அட்டையில் எழுதி வைக்க வேண்டாம்.
 • மெசினைப் பயன்படுத்தும் பொழுது தவறான முறையை பார்க்க நேரிட்டால் உடனடியாக Cancel செய்யவும்.

 • அருகில் இருப்பவர்களிடம் உதவி கேட்க வேண்டாம், PIN நம்பரை மறைத்துக் கொண்டு அழுத்தவும்.
 • எதற்கும், ஏ.டி.எம் மெசினை பயன்படுத்திய பிறகு நன்றாக close செய்து விட்டு செல்லவும்.
 • போலியான செயலிகள், இணையதளங்களில் ஏ.டி.எம் கார்டு விவரங்களை அளிக்க வேண்டாம்.

நம் வங்கி விவரங்கள், ஏ.டி.எம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் விவரங்களை பிறரிடம் பகிராமல் கவனமாக இருந்தால் பணம் திருடு போவதைத் தடுக்கலாம்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close