ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீக்கு முன்பும், பின்பும் வைரல் புகைப்படங்கள் !

பரவிய செய்தி
ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீக்கு முன்பும் பின்பும். pray for Australia .
மதிப்பீடு
விளக்கம்
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காரோ தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்தன. காட்டுப் பகுதிகள் எரிந்து சாம்பலான காட்சிகளும், விலங்குகளின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
குறிப்பாக, கங்காரோ தீவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வகையில் அமைந்து இருக்கும் புதர்காடுகளுக்கு இடையில் செல்லும் பாதையானது தீக்கிரையாவதற்கு முன்பாக இயற்கை சூழந்து இருக்கும் புகைப்படமும் , தீயால் எரிந்த பிறகு கரு நிறத்தில் காட்சி அளிக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீக்கும் முன்பு, பின்பு என வைரலாக சாலையின் புகைப்படமானது, Flinders Chase National Park பகுதியைச் சேர்ந்தது. தீ விபத்தின் காரணமாக தற்பொழுது அப்பகுதி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க : இயற்கை சூழ்ந்த சத்தியமங்கலம் பண்ணாரி சாலையா ?| நம்ம ஊரு இல்லை !
ஒரு காலத்தில் பசுமையால் நிரம்பி இருந்த இந்த சாலையானது, தீயால் கருக்கப்பட்ட கிளைகளைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் முற்றிலும் எரிந்து போயுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே, இதே கங்காரோ தீவில் பசுமையான சாலையை சத்தியமங்கலம் சாலை, இந்தியாவில் உள்ள செழிப்பான சாலை என வதந்திகளை பரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.