ஆஸ்திரேலியா நாட்டின் பெயர் மகாபாரதத்தில் இருந்து வந்ததா ? ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியப் பொய் !

பரவிய செய்தி

ஆஸ்திரேலியா இதற்கு முன் அஸ்த்ராலயா(Asthralaya) என்று அழைக்கப்பட்டது. அது பாண்டவர்கள் தங்களது அஸ்த்ராஸை(ஆயுதம்) சேமித்த இடத்தின் பெயர்.

மதிப்பீடு

விளக்கம்

ஆஸ்திரேலியா நாட்டின் பெயர் மகாபாரதத்தில் வரும் அஸ்த்ராலயாவில்(Astralaya) இருந்து பெறப்பட்டது என்றும், அதன் பொருள் மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை(Asthra) சேமித்துவைக்கும் இடம்(Aalaya) என்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

wisdomfromsrisriravishankar எனும் வலைத்தளத்தில் இந்தக் கூற்றைப் பற்றி ஒரு பதிவு உள்ளது.

உண்மை என்ன ?

இதன் உண்மையை அறிய கூகுளில் ஆஸ்திரேலியா மற்றும் அஸ்த்ராலயா(Astralaya) எனத் தேடியப் போது, இந்தக் கூற்று கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பரவிக் கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும், வாழும் கலை அமைப்பைத் தோற்றுவித்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆஸ்திரேலியா(Australia) நாட்டின் பெயர் அஸ்த்ராலயா என்பதில் இருந்து வந்ததாக விவரிக்கும் வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளது.

“இதுப்போன்ற கூற்று நமக்கு சிரிப்பை வர வைக்கிறது”, என்று 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுப்பெற்ற IPS அதிகாரி விஜய் சங்கர் சிங் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Twitter link 

National Library of Australia தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் “ஆஸ்திரேலியாவின் பெயர் எப்படி வந்தது” என்பதை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பட்டியலில் வைத்துள்ளது

ஆஸ்திரேலியா என்ற பெயர் வருவதற்க்கு முன் இந்த கண்டம் “Terra Australis Incognita”(Unkown South Land) என்று அழைக்கப்பட்டது. 17ம் நூற்றாண்டில் டச்சு(Dutch) கப்பலோட்டிகள் ஆஸ்திரேலியா கடற்கரையை அடைந்த பிறகு அதற்கு “நியூ ஹோலண்ட்(New Holland)” என பெயரிட்டனர்.

1804ம் ஆண்டு மேத்தியூ பிலிண்டெர்ஸ்(Matthew Flinders) எனும் ஆங்கில ஆய்வுப்பணியாளர் இந்த கண்டத்தை விவரிக்க ஆஸ்திரேலியா என்ற பெயரை பயன்படுத்தியுள்ளார். மகாபாரதம் குறித்தோ அஸ்த்ராலயா(Asthralaya) குறித்தோ அந்த வலைத்தளத்தில் எந்த தகவலும் குறிப்பிடவில்லை.

இதுபோன்று, மொரிசியசை ” முத்ராலயா ” (Mutralaya) எனவும், தாஜ்மகால் ” தேஜ் மகாலயா” (Tej Mehalaya) எனவும் அழைக்கப்பட்டதாக வதந்தி ஒன்றும் பரவி வருகிறது. இவை அனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகும்.

Twitter link 

முடிவு:

நம் தேடலில், ஆஸ்திரேலியா நாட்டின் பெயர் மகாபாரதத்தின் அஸ்த்ராலயா எனவும், அவை மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஆயுதங்கள் சேமிக்கப் பயன்படுத்திய இடம் என பரவும் தகவல் முற்றிலும் பொய்யான தகவல்.

ஆஸ்திரேலியா முதலில் “Terra Australis Incognita(Unkown South Land)” எனவும் அதற்கு பிறகு நியூ ஹோலண்ட் என அழைக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button