யார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.

பரவிய செய்தி

நாட்டின் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி தற்போதைய பிஜேபி ஆட்சியில் -0.4% , முந்தைய காங்கிரஸ்-2 ஆட்சியில் 12.3% ஆக இருந்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

Department of Commerce-ன் ஏற்றுமதி-இறக்குமதி பற்றிய தரவுகள் அடிப்படையில் காங்கிரஸ்-2 ஆட்சியில் இருந்த நாட்டின் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி பிஜேபி ஆட்சியை ஒப்பிடுகையில் அதிகமே. தெளிவான விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்.

விளக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் 2018 ஜூன் 30-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் ” Average Annual Growth Rate of Export ” ஆனது காங்கிரஸ்-2 (2009-2014) ஆட்சியில் 12.3% ஆகவும், பிஜேபி ஆட்சியில் -0.4% ஆகவும் உள்ளது என வெளியிட்டு இருந்தனர்.

இரு வேறு ஆட்சியில் நிகழும் மாற்றங்கள், வளர்ச்சி பற்றி அவ்வபோது பதிவுகள் வெளியாவதை பார்த்து இருப்போம். காங்கிரஸ் கூறியது போன்று மன்மோகன்சிங் மற்றும் நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டின் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சியை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க வேண்டும்.

ஏற்றுமதி வளர்ச்சி : 

ஒரு நாட்டின் வர்த்தகத்தின் சமநிலையானது(BoT) ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சார்ந்தது. தேவையான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட உள்நாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதும் மிக முக்கியம். வர்த்தக சமநிலை நாணயத்தின் மீதான நிலையான மதிப்பிற்கு முக்கியம் மற்றும் பணபரிமாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர்த்து ஏற்றுமதி வளர்ச்சியானது ஒரு நாட்டின் GDP வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி : 

Department of Commerce என்ற இந்திய அரசின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் உள்நாட்டு ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி பற்றிய புள்ளி விவரங்கள் The logical Indian என்ற இணையதளத்தில் வரைபடமாக வழங்கப்பட்டன. இதில், அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 2008-09 முதல் 2017-18 வரையில் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட தரவுகளின் படி 2009-2014 மற்றும் 2014-2018 ஆண்டுகளின் சராசரி மதிப்பு கீழ் உள்ளவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஏற்றுமதி வளர்ச்சி அமெரிக்க டாலர் மதிப்பு ஆனது காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் குறிப்பிட்டவை உடன் (12.3% என)  சரியாக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 2009-2014-ல் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி 18.40% ஆகவும், 2014-2018-ல் 0.89% ஆகவும் உள்ளது.

இதைத் தவிர,  World bank தளத்திலும் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி பற்றிய வரைபடம் இடம்பெற்றுள்ளது.

முடிவு :   

காங்கிரஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியது போன்று காங்கிரஸ்-2 ஆட்சியில் இருந்த  ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி பிஜேபி ஆட்சியை விட அதிகமாகவே இருந்துள்ளது என்பது உண்மையே.

Please complete the required fields.
ஆதாரம்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close