This article is from Aug 14, 2020

அயோத்தியில் பூமி பூஜைக்கு கூடிய கூட்டமென பரவும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ !

பரவிய செய்தி

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு கூடிய கும்பல். கொரோனா ஒரு அரசியல் நாடகமே என்பது அயோத்தியில் மோடி கூட்டிய கூட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது கொரோனா பொதுமுடக்கம் விதிகளை மீறி கூட்டம், பேரணி என விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டதாக பல தவறான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி அயோத்தியில் பூமி பூஜைக்கு செல்லும் போது கூடிய வரவேற்ற கூட்டம் என கீழ்காணும் வீடியோ தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

Facebook link | archive link  

உண்மை என்ன ? 

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அயோத்தியில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ந்த பூமி பூஜை விழா தொடர்பாக நேரலை காட்சிகள் வெளியாகின. எந்தவொரு பாதுகாப்பு ஏற்படும் இல்லாமல் பிரதமர் மோடி காரில் ஊர்வலம் செல்லும் வீடியோ சமீபத்தில் நிகழ்ந்தவை அல்ல என்பதை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது.

இரவு நேரத்தில் காரில் பூக்கள் தூவி பிரதமரை மக்கள் வரவேற்கும் வீடியோ குறித்து தேடுகையில் 2019 மே 9-ம் தேதி டைம் இணையதளத்தில் வெளியான புகைப்படமும், வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்ற காட்சியும் ஒன்றாக இருப்பதை காண முடிந்தது. அதில், ஏப்ரல் 25-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் சாலை நிகழ்ச்சியின் போது மோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கீ வார்த்தைகளை கொண்டு தேடுகையில், 2019 ஏப்ரல் 25-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் யூடியூப் சேனலில் ” PM Shri Narendra Modi’s roadshow in Kashi ” எனும் தலைப்பில் வெளியான வீடியோ கிடைத்தது. 1.17.35 மணி நேரத்தில் கூட்டத்திற்குள் காரில் மோடி செல்வதை காணலாம். இரண்டு வீடியோக்களிலும், பிரதமரின் உடை மற்றும் பின்னால் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றாக இருக்கிறது. பிரதமர் மோடி வாரணாசியில் காரில் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை அயோத்தியில் நிகழ்ந்ததாக வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க : அயோத்தியில் பூமி பூஜைக்காக கூடிய சாமியார்கள் கூட்டம் என வதந்தி !

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader