அயோத்தியில் பூமி பூஜைக்காக கூடிய சாமியார்கள் கூட்டம் என வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு கூடிய சாமியார்களின் கூட்டம் என மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மத வெறுப்புணர்வு மற்றும் அரசியல் கருத்துக்களுடன் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ந்த போது கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மக்கள் கூட்டம் கூடியதாக தொடர்ந்து வீண் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. பழைய வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வதந்திகளை பரப்பி இருந்தனர்.
மேற்காணும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2013-ம் ஆண்டு அலகாபாத் பகுதியில் நடைபெற்ற கும்ப மேளா திருவிழாவின் போது ஜெர்மனியைச் சேர்ந்த ட்ராவல் ஃபோட்டோகிராஃபர் பெர்கர் என்பவர் எடுத்த புகைப்படம் என தெரிந்து கொள்ள முடிந்தது. 121 Clicks எனும் தளத்திற்கு அளித்த பேட்டியில் ” சாதுக்கள் ” அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடுத்தது குறித்தும் பேசி உள்ளார்.
மேலும் படிக்க : அயோத்தியில் கூடிய கூட்டம் என வைரலாகும் பழைய வீடியோ, புகைப்படங்கள் !
இதற்கு முன்பாகவும், பழைய வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து அயோத்தியில் பூமி பூஜைக்கு கூடிய கூட்டம் என வதந்திகளை பரப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.