புது பொலிவுடன் மாற்றப்பட்ட அயோத்தியாவின் ரயில் நிலையமா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியாவில் உள்ள ரயில் நிலையத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து புதுப்பொலிவுடன் தயாராகி உள்ளதாக 1 நிமிட வீடியோ ஒன்று ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
Welcome to #Ayodhya Railway Station pic.twitter.com/D6SyOVZ94S
— Dr. Ajit Varwandkar (@Varwandkar) July 9, 2021
உண்மை என்ன ?
அயோத்தியா என வைரல் செய்யப்படும் வீடியோவின் 33-வது நொடியில் குஜராத் சுற்றுலாத் துறையின் லோகோ இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து ரயில் நிலையம் குறித்து தேடுகையில், குஜராத் காந்தி நகர் ரயில் நிலையம் தொடர்பான வீடியோவில் ரயில் நிலையத்தில் உள்ள தூண்களின் அமைப்பு பொருந்தி போவதை பார்க்க முடிந்தது.
கூகுள் மேப் தளத்தில் காந்தி நகர் ரயில் நிலையம் குறித்த பதிவுகளில் சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவே தற்போது அயோத்தியா என தவறாக வைரல் செய்யப்பட்டு வருகிறது.
2020 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ராமர் கோவில் கட்டி முடிப்பதற்கு முன்பாக அயோத்தியாவில் உள்ள ரயில் நிலையம் இரண்டு ஆண்டுகளுக்குள் சீரமைத்து மறுக்கட்டுமானம் செய்யப்படும் என்றும், இதற்கான பட்ஜெட் தொகை 80 கோடியில் இருந்து 104 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் ” வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், புது பொலிவுடன் அயோத்தியா ரயில் நிலையம் என பரப்பப்படும் வீடியோ குஜராத் காந்தி நகரில் உள்ள ரயில் நிலையம் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.