ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்தில் போராட்டத்தில் இருக்கும் மாணவி| ஃபேஸ்புக் வதந்தி !

பரவிய செய்தி

டிசம்பர் 12-ம் தேதி பத்திரிகையாளர் உடன், டிசம்பர் 13-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில், டிசம்பர் 14-ம் தேதி மேற்கு வங்கம், டிசம்பர் 15-ம் தேதி டெல்லியில் போராடும் பெண்.

மதிப்பீடு

விளக்கம்

டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரேனா என்பவரும், அவரின் தோழி லதீடா சஹாலூன் ஆகிய இருவரும் CAB/CAA-க்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல்துறையிடம் இருந்து தங்களின் ஆண் நண்பரை காப்பாற்றிய தருணத்தில் இருந்து ஊடகங்களின் மற்றும் சமூக ஊடகங்களின் கவனத்தைப் பெற்றார்கள்.

Advertisement

இதில், மாணவி ஆயிஷா ரேனா ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் கலந்து கொண்ட போராட்டங்களின் புகைப்படங்கள் என 4 புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை நக்சல்கள் எனக் குறிப்பிட்டு Ban Peta India என்ற முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தனர். ஆனால், அந்த பதிவு தற்பொழுது அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

மேற்காணும் 4 புகைப்படத்தில் இருக்கும் மாணவி ஆயிஷா ரேனா தான். ஆனால், வெவ்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல.

புகைப்படம் 1 :

Twitter link | archived link 

முதல் புகைப்படம் 2019 டிசம்பர் 16-ம் தேதி barka dutt என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. டிசம்பர் 15-ம் தேதி போலீஸ் லத்தி சார்ஜ் சமயத்தில் ஆயிஷா மற்றும் அவரின் தோழிகள் தன் நண்பரை காப்பாற்றும் வீடியோ வைரலான பிறகு barka dutt என்பவர் ஆயிஷா மற்றும் அவரின் தோழியிடம் பேட்டி எடுத்து இருந்தார்.

ஆகையால், முதல் புகைப்படம் டிசம்பர் 12-ம் தேதி எடுக்கப்பட்டது அல்ல, டிசம்பர் 16-ல் வெளியான புகைப்படம்.

புகைப்படம் 2 :

இரண்டாவதாக, போராடும் மாணவர்களுக்கு மத்தியில் ஆயிஷா இருக்கும் புகைப்படம் ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் (புது டெல்லி) டிசம்பர் 12-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் என ” The outlook ” என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆகையால், இப்புகைப்படம் டிசம்பர் 13-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது அல்ல.

புகைப்படம் 3 :

மூன்றாவதாக போராட்டத்தில் இருக்கும் மாணவிகளின் புகைப்படம் ” 42 Jamia Millia Islamia students detained briefly during anti CAB protest ” என்ற தலைப்பில் Mumbai Mirror செய்தி இணையதளத்தில் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் டெல்லியில் டிசம்பர் 13-ம் தேதி எடுக்கப்பட்டதே தவிர, 14-ம் தேதி மேற்கு வங்கத்தில்  இல்லை.

புகைப்படம் 4 : 

Archived link 

இறுதியாக இருக்கும் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்ட தேதியும், இடமும் சரியானதே. டிசம்பர் 15-ம் தேதி டெல்லியில் காவல்துறையிடம் இருந்து ஆண் நண்பரை பாதுகாக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோவே இந்திய அளவில் வைரலாகியது.

டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்துக் கொண்டே வெவ்வேறு நாளில் வெவ்வேறு மாநிலங்களில் போராடும் பெண் என போராடுபவர்கள் குறித்து பொய்யான தகவல்களையும், நக்சல் என பட்டங்களையும் வழங்கி வருகின்றனர்.

குடியுரிமை சட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஏராளமான போலிச் செய்திகளை யூடர்ன் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. தவறான தகவல்களை பகிர வேண்டாம், உண்மையான தகவல்களை மட்டும் பகிர்வதை உறுதி செய்யுங்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button