This article is from Nov 13, 2019

பாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம்?| புகைப்படம் உண்மையா ?

பரவிய செய்தி

அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம்.

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில் இருக்கும் பாபர் மசூதி பகுதியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், அயோத்தியாவில் இருக்கும் பாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம் என ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது.

ஃபாலோயர் தரப்பில் அனுப்பப்பட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், பல ஆண்டுகளாக இப்புகைப்படம் இணையத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது.

மேலும் தொடர்ந்து புகைப்படம் குறித்து தேடிய பொழுது ” junagadh ” என்ற வார்த்தை கிடைத்தது. அந்த வார்த்தையை வைத்து தேடிய பொழுது, அது குஜராத் மாநிலத்தில் இருக்கும் நகரம் என அறிய முடிந்தது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகாத் என்ற நகரில் இருக்கும் ” ஜமா மசூதி ” உடைய புகைப்படம் ” Holidify ” என்ற சுற்றுலா இணையதளத்தில் இருந்து நமக்கு கிடைத்தன. அப்புகைப்படத்தையே அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதி எனப் பரப்பி இருக்கிறார்கள்.

Youtube video | archived link 

இதேபோன்று, 2010-ல் ” The Mahabat Maqbara mosoleum & Jammi mosque ” என்ற தலைப்பில் ஜமா மசூதியின் பகுதிகள் காண்பிக்கப்படும் வீடியோ யூட்யூப்-ல் வெளியாகி இருக்கிறது.

நம்முடைய தேடலில் இருந்து, குஜராத்தில் இருக்கும் ஜமா மசூதியை அயோத்தியில் இருக்கும் பாபர் மசூதி என பரப்பி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. மேலும், பல ஆண்டுகளாக இப்புகைப்படங்கள் இணையத்தில் தவறாக பகிரப்பட்டு உள்ளன என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader