தன் தாயின் இதயத்தை உணர்ந்து அழுகையை நிறுத்தும் குழந்தை ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

சீனாவை உலுக்கிய வீடியோ ! இந்த குழந்தையின் தாய் பிரசவத்தில் இறந்து விட்டார். தனது இதயத்தை தானம் செய்து விட்டார். அந்த இதயம் கருப்புச் சட்டைக்காரருக்கு பொருத்தப்பட்டது. அந்த குழந்தையின் உணர்வை பாருங்கள் !

மதிப்பீடு

விளக்கம்

சீனாவை உலுக்கிய சம்பவம் என குழந்தையின் அழுகை வீடியோ இணையத்தில் அதிகம் பார்த்திருக்கக்கூடும். 2018-ம் ஆண்டு அக்டோபரில் எல்லாப் புகழும் இறைவனுக்கே ரியாஜ் எனும் முகநூல் கணக்கில் கீழ்காணும் வீடியோ வெளியாகி 36 லட்சம் பார்வைகள், 27 ஆயிரம் லைக்குகள், 12 ஆயிரம் ஷேர்களை பெற்று இன்றும் வைரலாகி வருகிறது.

Advertisement

Facebook link | Archived link

அதில், ஓர் குழந்தையின் அழுகையை நிறுத்த குழந்தையின் தந்தை முயற்சித்துக் கொண்டிருப்பதுடன் தொடங்குகிறது இந்த வீடியோ. எனினும், தொடர்ந்து நிறுத்தாமல் அழுதுக் கொண்டிருக்கும் குழந்தையை சமாதானம் செய்ய பாட்டி உள்ளிட்ட உறவினர்கள் பலர் ஒன்றன்பின் ஒன்றாக முயற்சித்து வருகின்றனர். விளையாட்டுப் பொருட்களும் கூட பயன் அளிக்கவில்லை, ஒரு கட்டத்தில் குழந்தையின் அழுகை அதிகமாகவே செய்கிறது.

அந்நேரத்தில், கருப்பு நிற உடையில் வரும் ஒருவர் குழந்தையை வாங்கி, தனது கைகளில் தாங்கிக் கொள்கிறார். சிறிது நேரத்தில் குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு அவரின் இதய துடிப்பை கேட்கத் துவங்குகிறது. பின்னர், அக்குழந்தை சிரிக்கத் துவங்குகிறது . இப்படியொரு மையக்கருவைக் கொண்டிருக்கும் வீடியோ சீனாவில் நிகழ்ந்த சம்பவம் என பரவி வருகிறது.

தாயின் இதயத்தை அறியும் குழந்தையின் உணர்வு அனைவருக்கும் இரக்க உணர்வையும், அன்பையும் மேலோங்கச் செய்து இருந்தது. எனினும், வீடியோவில் இருப்பது சீனாவில் நிகழ்ந்த சம்பவம் என கூறும் தகவலை ஆராய்ந்து பார்க்க முற்பட்டோம்.

Advertisement

உடல் உறுப்பு தானம் : 

“மனதை உருக்கும் கருத்தைக் கொண்டிருக்கும் வீடியோ உண்மையில் உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சித்தரிப்பு வீடியோவே. இரண்டு வருடங்களுக்கு முன்பு CCTV என்ற சீன செய்தி முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவின் இறுதியில் CCTV என இடம்பெற்று இருக்கும்.

Facebook link | Archived link  

அந்த வீடியோவின் முகநூல் குறிப்பில், ” பிறருக்கு உடல் உறுப்பு தானம் செய்வது வாழ்வை மாற்றும். இது அற்புதமானது, சில மாதங்களுக்கு முன்பு தன் தாயின் இதயத்தை பெற்றுக்கொண்டவரால் குழந்தை அழுகையை நிறுத்தி உள்ளது ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும், 2010-ல் இருந்து சீனாவில் ஜூன் 11-ம் தேதி உடல் உறுப்பு தான நாள் அனுசரிக்கப்படுகிறது என்பதுடன் பிற விவரங்களையும் இணைத்து இருக்கிறார்கள் “.

இந்த வீடியோவை சீன அரசு உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டது. சட்டரீதியாக உடல் உறுப்பு தானம் செய்வதை சீன அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வீடியோவை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

2017-ல் மார்ச் 6-ம் தேதி ” Touching Chinese organ donation commercial ” என்ற தலைப்பில் யூட்யூப் சேனல் ஒன்றில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது

வீடியோவின் காட்சிகள் எடுக்கப்பட்ட விதத்தை காணுகையில் விளம்பர பாணியில் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், மக்களிடம் ஆதரவை பெற்ற வீடியோ உலக அளவில் பரவி வருகிறது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close