This article is from Oct 12, 2021

பஹ்ரைன் மன்னர் அதிநவீன ரோபோ பாதுகாப்புடன் செல்லும் காட்சியா ?

பரவிய செய்தி

பஹ்ரைன் மன்னர் துபாய் விமான நிலையத்தில் தனது 360 கேமராக்கள் மற்றும் கைத்துப்பாக்கி இணைக்கப்பட்ட ரோபோவுடன் வந்து இறங்கினார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு தொழில்நுட்பம் மிக வேகமாக நகர்கிறது.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

ரோபோக்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கையில் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போன்று பாதுகாப்பிற்காக ரோபோக்களை பயன்படுத்துவதாக ஓர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துபாய் விமான நிலையத்திற்கு வந்த பஹ்ரைன் மன்னர் கேமராக்கள் மற்றும் துப்பாக்கி பொருத்தப்பட்ட ரோபோவுடன் செல்வதாக 30 நொடிகள் கொண்ட வீடியோ ஆச்சரியத்துடன் பரவிக் கொண்டிருக்கிறது.

Twitter link | Archive link 

உண்மை என்ன ?

வைரல் வீடியோவில் இடம்பெற இடத்தில் தரை விரிப்பில் இருக்கும் ” ETIMAD ” என்பதைக் கொண்டு தேடுகையில், 2019 மார்ச் 5-ம் தேதி ” Titan the Robot – Etimad ” எனும் தலைப்பில் இதே வீடியோ யூடியூப்பில் வெளியாகி இருக்கிறது.

வீடியோவிற்கு கீழே, டைட்டன் தி ரோபோ என்பது பிரிட்டிஷ் நிறுவனமான சைபர்ஸ்டீன் ரோபோட்ஸ் ஆல் உருவாக்கப்பட்ட ரோபோ எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கொண்டு தேடுகையில், ” அபுதாபி தேசியக் கண்காட்சி மையத்தில்(ADNEC) தொடங்கப்பட்ட Idex2019-ல் 1,310க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் நிகழ்வில் பங்கேற்றன. அதில், பிரிட்டிஷ் நிறுவனம் சைபர்ஸ்டீன் ரோபோட்ஸ் உருவாக்கிய டைட்டன் தி ரோபோ எனும் முதல் பொழுதுபோக்கு ரோபோவையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் ” என 2019 பிப்ரவரியில் கல்ஃப் நியூஸ் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

அதேபோல், வைரல் செய்யப்படும் வீடியோ காட்சியில் ரோபோவிற்கு முன்பாக செல்லும் நபர் பஹ்ரைன் நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா அல்ல.

முடிவு : 

நம் தேடலில், பஹ்ரைன் மன்னர் துபாய் விமான நிலையத்தில் தனது 360 கேமராக்கள் மற்றும் கைத்துப்பாக்கி இணைக்கப்பட்ட ரோபோவுடன் வந்து இறங்கினார் என பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பது பஹ்ரைன் மன்னர் அல்ல, அந்த ரோபோ பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது என்றும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader