பாலக்கோட் தாக்குதலில் 300 பேர் பலி என பாகிஸ்தான் தூதர் ஒப்புக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

பரவிய செய்தி

பாலக்கோட் தாக்குதலில் 300 பேர் பலி என்பது தான் உண்மை.. பாகிஸ்தான் ஒப்புதல் !

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2019-ம் ஆண்டில் பாலக்கோட்டில் இந்திய ராணுவ விமானப்படை நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் ராணுவமும், அரசும் அதனை மறுத்து வந்தன.

Advertisement

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி ஜாஃபர் ஹிலாலி பாகிஸ்தானின் டிவி சேனல் விவாத நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை தாக்குதலில் 300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். யாரும் பலியாகவில்லை என அப்போது கூறியது பொய். எல்லையில் நிலைமை மோசமாகி விடக்கூடாது என்பதற்காக அப்படி சொல்லப்பட்டது என அவர் கூறியதாக சமூக வலைதளங்களில், பாலிமர், தினமலர், ஒன்இந்தியா, விகடன் உள்ளிட்ட தமிழ் ஊடகச் செய்தியிலும் வெளியாகி வருகிறது.

உண்மை என்ன ? 

Advertisement

பாலக்கோட்டில் இந்திய ராணுவ விமானப்படையால் நடத்தப்பட்ட தாக்குதலில் 300 பேர் உயிரிழந்ததை பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஜாஃபர் ஹிலாலி கூறியதாக ஏஎன்ஐ, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே உள்ளிட்ட பல இந்திய ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டு இருந்தன. இதையடுத்து, இந்தியாவில் பிற மொழிகளில் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

பாலக்கோட்டில் 300 பேர் கொல்லப்பட்டதை பாகிஸ்தானின் ஹம் டிவி விவாத நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டதாகக் கூறும் பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஜாஃபர் ஹிலாலி, ” வெட்டி, ஒட்டப்பட்ட தன்னுடைய ஹம் டிவி பேச்சை அடிப்படையாக கொண்டு டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு இருப்பதாகவும், இந்திய பிரதமர் மோடியை விமர்சித்தும் ” ட்வீட் செய்து இருக்கிறார்.

Twitter link | Archive link 

Twitter link | Archive link

மேலும், ஹம் டிவி செய்தியில் பேசிய வீடியோவின் பகுதியையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link

2020ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி ஹம் நியூஸ் ” Program Agenda Pakistan with Amir Zia ” எனும் தலைப்பில் வெளியான விவாத நிகழ்ச்சியில் பாலக்கோட் தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஜாஃபர் ஹிலாலி பேசி இருக்கிறார்.

மேற்காணும் வீடியோவில், 4.18வது நிமிடத்தில் இருந்து ஜாஃபர் ஹிலாலி பேசத் தொடங்கி இருக்கிறார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து 5.14-வது நிமிடத்தில், ” நீங்கள் என்ன செய்தீர்கள், இந்தியா போர் செயலில் ஈடுபட்டது. சர்வதேச எல்லையைத் தாண்டி இந்தியா ஈடுபட்ட போரில் அவர்கள் குறைந்தது 300 பேரைக் கொல்ல நினைத்தனர் “எனக் கூறியுள்ளார்.

அடுத்து, ” தற்செயலாக, அவர்கள்(பாகிஸ்தான் மக்கள்) இறக்கவில்லை. இந்தியா ஒரு கால்பந்து மைதானத்தில் குண்டு வீசியது ” என 5.29வது நிமிடத்தில் கூறியுள்ளார். பாலக்கோட் வான்வழித் தாக்குதலில் 300 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தானின் முன்னாள் தூதர் நிகழ்ச்சியின் எந்தவொரு கட்டத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவின் எண்ணம் அதுவாக இருந்தது என்றேக் குறி இருக்கிறார்.

இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஜாஃபர் ஹிலாலி 300 பேர் இறந்ததை ஒப்புக் கொண்டதாக செய்தி வெளியிட்டன. ஆனால், ஆதாரமாக உண்மையான வீடியோ இணைப்பை வெளியிடவில்லை. மாறாக, சமூக வலைதளங்களில் பரவிய கட், எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டு விட்டனர்.

Twitter link | Archive link 

சமூக வலைதளங்களில் வைரலாகிய இந்த வீடியோவில், ஹம் டிவி விவாத நிகழ்ச்சியின் போது இந்தியப் பிரதமர் மோடி ராணுவ உடையில் இருக்கும் புகைப்படத்தை இணைத்து உள்ளனர். ஆனால், உண்மையான ஹம் டிவி வீடியோவில் இந்தியப் பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை.

முடிவு  : 

நம் தேடலில், பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஜாஃபர் ஹிலாலி  இந்திய விமானப்படை தாக்குதலில் பாலக்கோட்டில் 300 பேர் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டதாக இந்திய ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. சமூக வலைதளங்களில் பரவிய ஹம் டிவி விவாத நிகழ்ச்சியின் கட் மற்றும் எடிட் வீடியோவின் அடிப்படையில் தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button