அருணாச்சலப் பிரதேசத்தில் மூங்கிலில் விமான நிலையம் எனத் தவறான வீடியோவைப் பதிவிட்ட குமுதம் !

பரவிய செய்தி

ஃபுல்லா மூங்கில்ல விமான நிலையம் (இடம்: அருணாச்சல பிரதேசம்)- குமுதம்

Facebook Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் விமான நிலையம் கட்டி முடிக்கும் பணி  முடிவடைந்துள்ளது. இதனைப் பிரதமர் விரைவில் திறந்து வைக்க உள்ளார். அருணாச்சல பிரதேச விமான நிலையம் முழுவதும் மூங்கிலால் கட்டப்பட்டது எனச் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

மேலும், மூங்கிலால் ஆன விமான நிலையம் எனக் குமுதம் நாளிதழ் தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டிருந்தது. பாஜகவைச் சேர்ந்தவர்களும் கூட இவ்வீடியோவை பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.

Twitter Link | Archive Link

உண்மை என்ன ?

மூங்கிலால் ஆன அருணாச்சலப் பிரதேச விமான நிலையம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் செய்ததில், அது பெங்களூரு விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் என்பது தெரியவந்தது.

பெங்களூரு விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் 2022 நவம்பர் 11ம் தேதி பிரதமர் மோடியால் திறந்த வைக்கப்பட்டது. இதுகுறித்துப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 11ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில் மூங்கிலால் ஆனா உட்பகுதியை நம்மால் காண முடிகிறது.

Twitter link 

மேலும், விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பெங்களூரு விமான நிலையம் குறித்துப் பதிவிட்டிருந்தனர். விமான நிலையத்தின் உட்பகுதியில் மூங்கில்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Twitter link 

தற்போது அருணாச்சல விமான நிலையம் எனப் பரவி வரும் வீடியோவை, சிஎன்பிசி டிவி 18 செய்தித்தளம் Quick Look Of Terminal 2 At Kempegowda International Airport, Bengaluru எனும் தலைப்பில் நவம்பர் 9ம் தேதி பதிவிட்டிருந்தது.

அருணாச்சலப் பிரதேச விமான நிலையம் குறித்து இணையத்தில் தேடியபோது, விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின்( Airport Authority of India) அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டிருந்தது.

Twitter link 

மேலும், விமான நிலையத்தின் முகப்பில் அம்மாநில பறவையான மலை இருவாட்சி(Great Hornbill) பறவையின் உருவம் மூங்கிலால் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தது.

முடிவு :

நம் தேடலில், மூங்கிலால் ஆன அருணாச்சல பிரதேச விமான நிலையம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ 2022 நவம்பர் 11ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பெங்களூரு விமான நிலயத்தின் இரண்டாம் முனையம் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader