கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதை தடை செய்வோம் என அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டுகள் !

பரவிய செய்தி
ஆடு, கோழி பலியிடும் முறை சனாதன வழிபாட்டிற்கு எதிரானது. பாஜக ஆட்சிக்கு வந்தால் பலியிடும் முறையை தடை செய்வோம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கோவில்களில் ஆடு,கோழி பலியிடும் முறையை தடை செய்வோம் ஆடு,கோழி பலியிடும் முறை சனாதனத்தில் இல்லை – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் போது கோவில்களில் ஆடு, கோழி பலியிடும் முறையை தடை செய்வோம். ஆடு, கோழி பலியிடும் முறை சனாதனத்தில் இல்லை என அண்ணாமலை கூறியதாகக் கூறி புதியதலைமுறை மற்றும் தந்தி டிவியின் நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் திமுகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
ஆட்சிக்கு வந்தா பாத்துக்கலாம்😅
உன் வாய்க்கு பூட்டு போட முதலில் சட்டம் கொண்டு வர வேண்டும்…😷#சனாதனத்தைஒழிப்போம் pic.twitter.com/3x5CmaTTd8— nithya muthuswamy (@nithyamuth6756) September 11, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி மற்றும் புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், இவ்வாறு எந்த செய்தியையும் அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும், இதுகுறித்து அண்ணாமலை ஏதாவது அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா என அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தேடினோம். அதில் இதுகுறித்து எந்த பதிவுகளும் இடம்பெறவில்லை.
மேற்கொண்டு தந்தி டிவி மற்றும் புதிய தலைமுறை பக்கங்களில் தேடுகையில், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டுகளில் உள்ள தேதி மற்றும் நேரத்தை ஒப்பிட்டு பார்க்கையில் வேறு செய்திகளே வெளியாகி இருக்கின்றன. அதில் போலியான செய்தியை எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளர்.
மேலும் படிக்க: பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என நாகர்கோவில் கிராம சபையில் தீர்மானம் எனப் பரவும் போலிச் செய்தி !
இதற்கு முன்பும் எடிட் செய்யப்பட்ட பல்வேறு போலி நியூஸ் கார்டுகள் தவறாகப் பரப்பப்பட்டன. அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தும் நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: அண்ணாமலையின் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் போது கோவில்களில் ஆடு, கோழி பலியிடும் முறையை தடை செய்வோம் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவி வரும் தந்தி டிவி மற்றும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.