பெங்களூர் வெள்ள நீரில் சிறுவன் நீச்சல் அடித்து விளையாடுவதாக பரவும் தவறான வீடியோ.

பரவிய செய்தி

பெங்களூரின் மகிழ்ச்சியான நபர்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த பலத்த மழையால் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் நகரமே வெள்ள நீரால் சூழ்ந்து பெரும் பாதிப்பை சந்தித்தது. வெள்ள நீரால் பெங்களூரும், அங்கு வசிக்கும் மக்களும் சந்தித்த இடர்பாடுகள் தொடர்பான எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், E=MC² எனும் ட்விட்டர் பக்கத்தில், பெங்களூரின் மகிழ்ச்சியான நபர் எனக் கூறி சாலையில் உள்ள வெள்ள நீரில் சிறுவன் நீச்சல் அடித்து மிதந்து செல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

மேலும், மலையாள செய்தி தளமான மனோரமா ஆன்லைன் இணையதளத்தில் பெங்களூர் மழை மற்றும் வெள்ள பாதிப்பு பற்றி வெளியிட்ட செய்தியிலும் இதே ட்வீட் பதிவை இணைத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் சிறுவனின் வீடியோவை Invid we verify கருவி மூலம் கிப்ரேம்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், சாலையில் ஓடும் நீரில் சிறுவன் குதித்து மிதந்து போகும் வீடியோ பெங்களூரின் வெள்ள பாதிப்பிற்கு முன்பில் இருந்தே சுற்றிக் கொண்டிருக்கிறது என தெரிய வந்தது.

இதையடுத்து, மேற்கொண்டு தேடிய போது, கடந்த 2020ம் ஆண்டு ரெனடோ எனும் ட்விட்டர் பக்கத்தில் ஸ்பானிஷ் மொழியிலும், Tujane TV எனும் முகநூல் பக்கத்தில் அரபிக் மொழியிலும் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது. 

Twitter link 

Facebook link 

சாலையை மூழ்கடித்து இருக்கும் நீரில் சிறுவன் நீச்சலடித்து மிதந்து செல்லும் வீடியோ பல நாடுகளில் ட்ரோல் மற்றும் நகைச்சுவையான கருத்துடன் பரப்பப்பட்டு இருக்கிறது. அதை பெங்களூர் வெள்ள பாதிப்புடன் தொடர்புப்படுத்தி சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. மேலும், இந்த வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என உறுதியாக தெரியவில்லை.

முடிவு : 

நம் தேடலில், பெங்களூரில் வெள்ள நீரில் சிறுவன் மகிழ்ச்சியாக நீச்சல் அடித்து மிதப்பதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அது பெங்களூரைச் சேர்ந்தது அல்ல. இந்த வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே பல நாடுகளில் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader