டெல்லியில் வங்கதேச முஸ்லீம் ஒருவர் திருநங்கையைக் கொன்றதாகப் பரவும் தவறான செய்திகள் !

பரவிய செய்தி
டெல்லி குருகிராமில் ஒரு பங்களாதேஷி மூன்றாம் பாலினத்தவரை கொன்று தலீபான்கள் மாதிரி தொங்கவிட்டு ஓடிவிட்டான்..
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 5 ஆண்டுகளில் வங்கதேசத்தைச் சோ்ந்த 2,399 போ் போலி இந்திய ஆவணங்களைப் பயன்படுத்தி வந்துள்ளதாகக் கூறி, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச மக்களை கண்டறிய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடந்த 2022 ஜூலையின் போது ஒன்றிய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள குருகிராமில் சட்டவிரோதமாக வசித்து வரும் வங்கதேச முஸ்லீம் ஒருவர் திருநங்கை ஒருவரை தாலீபான்கள் மாதிரி கொன்று தொங்கவிட்டுள்ளதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் திருநங்கையின் உடல் பால்கனியில் தொங்கவிடப்பட்டுள்ளதையும் காண முடிந்தது.
बांग्लादेशी मुस्लिमों ने किन्नर की हत्या कर लटका दिया
किराए के मकान में रह रहे थे बांग्लादेशी
तुम उन्हें शरण दोगे वो तुम्हें खत्म करेंगे
गुरुग्राम के धर्मपुर का है मामला, जहां के लोगों का कहना है कि वहां कई अवैध रूप से बांग्लादेशी रह रहे हैं#NRC_लाओ_भारत_बचाओ pic.twitter.com/N9ZSlPv5B2
— Abhay Pratap Singh (बहुत सरल हूं) (@IAbhay_Pratap) July 4, 2023
बांग्लादेशी मुस्लिमों ने किन्नर की हत्या कर लटका दिया किराए के मकान में रह रहे थे बांग्लादेशी तुम उन्हें शरण दोगे वो तुम्हें खत्म करेंगे गुरुग्राम के धर्मपुर का है मामला, जहां के लोगों का कहना है कि वहां कई अवैध रूप से बांग्लादेशी रह रहे हैं #NRC_लाओ_भारत_बचाओ pic.twitter.com/wQxvOYqzx1
— Gajendra Gehlot (@MirrorGajendra) July 4, 2023
மேலும் பரவி வரும் பதிவுகளில், “வங்கதேச மக்களுக்கு நீங்கள் அடைக்கலம் கொடுங்கள், ஆனால் அவர்கள் பதிலுக்கு உங்களைக் கொன்றுவிடுவார்கள். குருகிராமில் உள்ள தரம்பூர் வழக்கு தான் இது. அங்கு ஏராளமான வங்கதேச மக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக மக்கள் கூறுகிறார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த சம்பவம் கடந்த ஜூலை 3 அன்று நடந்ததுள்ளது என்பதையும், இறந்த அந்த பெண்ணின் பெயர் பிரியா என்பதையும் கண்டறிய முடிந்தது.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் தேடியதில், Gurugram Police தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூலை 05 அன்று இந்த சம்பவம் தொடர்பாக பதிவிட்டுள்ளது.
सोशल मीडिया पर वायरल हो रहे एक मैसेज जिसमें बताया गया है कि धर्मपुरी सेक्टर-108 में बांग्लादेशी मुसलमान ने एक किन्नर की तालिबानी अंदाज में निर्मम हत्या करके लटकाया है। यह असत्य है।
……..— Gurugram Police (@gurgaonpolice) July 5, 2023
அதில், “இந்தச் சம்பவம் 2023 ஜூலை 3 அன்று நடந்தது, ராஜேந்திரா பார்க் பகுதி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பிரியா என்ற பெண்மணியின் நண்பர் ஒருவர், பிரியா உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். இது குறித்து, 174 CrPC வழக்கின் கீழ், ராஜேந்திர பார்க் காவல் நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவள் கொலை செய்யப்ப்பட்டாள் என்பது உண்மைக்குப் புறம்பானது.” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் உண்மைத்தன்மையை அறிய நமது யூடர்ன் தரப்பு, குர்கான் ராஜேந்திர பார்க் காவல் நிலையத்தை அணுகியது. இது குறித்து பதிலளித்த அவர்கள், “வைரலான செய்தி பொய்யானது என்றும், திருநங்கை (பிரியா) தற்கொலை செய்துகொண்டார்” என்றும் உறுதி செய்தனர்.
மேலும் படிக்க: இந்தியாவில் உள்ள மதரஸாவில் ஆசிரியர் சிறுவனைக் கொடூரமாக தாக்குவதாகப் பரவும் பங்களாதேஷ் வீடியோ !
மேலும் படிக்க: தமிழ்நாட்டு மசூதியின் உண்டியல் பணம் எனப் பரப்பப்படும் பங்களாதேஷ் வீடியோ !
முடிவு:
நம் தேடலில், குர்கானில் வங்கதேச முஸ்லீம் ஒருவர் திருநங்கையைக் கொன்றதாகப் பரவும் வீடியோ தொடர்பான செய்திகள் தவறானவை என்பதையும், அந்த பெண் கொலை செய்யப்படவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.