This article is from Oct 30, 2018

வங்கிகளின் பெயரில் போலியான செயலிகள் : சோபோஸ் லேப் அறிக்கை.

பரவிய செய்தி

முன்னணி வங்கிகளின் பெயரில் போலியான ஆன்ட்ராய்டு செயலி மூலம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனமான சோபோஸ் லேப் வெளியிட்ட அறிக்கையில், SBI, ICICI, Axis bank உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளின் பெயரில் இருக்கும் போலியான ஆன்ட்ராய்டு செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

விளக்கம்

ஆன்ட்ராய்டு போன்களில் வங்கி சேவையை கையடக்கமாக கொண்டு வந்தது இன்றைய நவீன வாழ்க்கையில் அனைவருக்கும் பயனளிக்கிறது. எனினும், நவீன உலகில் தகவல் திருட்டு உருவாகி வருவதை பலரும் அறியாமல் உள்ளனர்.

சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனமான சோபோஸ் லேப்(Sophos lab) வெளியிட்ட அறிக்கையில், “ SBI, ICICI, Axis bank, IOB, BOB , YES bank மற்றும் சிட்டி பேங்க் உள்ளிட்ட முக்கிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆன்ட்ராய்டு போன்களில் மூலம் பயன்படுத்தும் செயலிகள் வாயிலாக தகவல்களை இழக்கின்றனர். Google play store-ல் இடம்பெறும் இந்த செயலிகள் வங்கிகளின் உண்மையான செயலிகளை போன்றே ஒத்து இருக்கின்றன மற்றும் இந்த செயலிகள் இலவசப் பொருட்களை அறிவித்து வாடிக்கையாளர்களை download மற்றும் Install செய்ய வைக்கின்றனர் “. எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போலியான செயலிகளின் logo உள்ளிட்டவை வங்கி செயலி உடன் ஒப்பிட்டு உண்மையா ? பொய்யா என அறிய முடியாத வகையில் உள்ளது. போலியான செயலில் மால்வர் இருப்பதால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை திருடி இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

போலியான வங்கி செயலி பற்றிய அறிக்கை வெளியான பிறகும் சில வங்கிகள் அதைப் பற்றி ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், சில வங்கிகள் இது தொடர்பான விசாரணையை துவங்கி உள்ளனர் மற்றும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு சம்பவங்களுக்கு பொறுப்பான நேஷனல் நோடேல் ஏஜென்சி CERN-னிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். YES BANK தரப்பில் பேங்க் சைபர் திருட்டு துறையிடம் இவ்விவகாரம் குறித்து தெரிவித்ததாக கூறினர். ஆனால், மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI-யிடம் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை.

“ ஏமாற்றம் மால்வர் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்படும் “ என பங்கஜ் கோஹ்லி, சோபோஸ் லேப்.

ஏ.டி.எம் சென்று பணத்தை பயனாளர்கள் எடுப்பர் மற்றும் அதே வீடு தேடி வருவதால் “ உண்மையான நல்ல சேவை “ என சில கூற்றுகள் உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஆன்ட்ராய்டு போன்களில் செயலி வழியாக வங்கி சேவையை பெறுபவர்கள் போலியான செயலிகள் பற்றி அறிந்து தகவல் திருட்டில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader