உலக உணவு தினம்: விவசாயிகளுக்கு புதிய கடன் மேளா திட்டம்.

பரவிய செய்தி
உலக உணவு தினத்தையொட்டி விவசாயிகளுக்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி கடன் மேளா திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் அக்டோபர் 16-ம் தேதி வரை விவசாயிகள் கடன் பெறலாம்.
மதிப்பீடு
சுருக்கம்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி அக்டோபர் 16-ம் தேதி வரையிலான நாட்களுக்கு இந்தியாவில் பல பகுதிகளில் வைத்திருக்கும் பரோடா கிஸான் பக்ஹ்வடா என்னும் கடன் மேளா திட்டம் மூலம் விவசாயத்திற்கு தேவையான பொருட்களுக்கு கடன் உதவி பெறலாம்.
விளக்கம்
உலக உணவு தினத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் கொண்டாட பேங்க் ஆஃப் பரோடா வங்கி “பரோடா கிஸான் பக்ஹ்வடா “ என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் விவசாயத்திற்கு மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகளுக்கு எளிதாக கடனைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
பரோடா கிஸான் பக்ஹ்வடா என்னும் இந்த தனித்துவமான தொடக்கம் அக்டோபர் 1 முதல் 16-ம் தேதி வரையில் இந்தியாவில் உள்ள 5,518 வங்கி கிளையிலும் வழங்கப்படுகிறது. இதில், 3.378 கிளைகள் கிராமப்புறம் மற்றும் கிராமம் சார்ந்த பகுதிகளில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டிற்குள் இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற அரசின் முயற்சியை இந்த தொடக்கம் அதிகரிக்கும் என வங்கி பொது மேலாளர் கூறியுள்ளார்.
விவசாய தேவையை மையமாகக் கொண்டு 11 தயாரிப்புகளை பேங்க் ஆஃப் பரோடா கொண்டுள்ளதையும் மற்றும் அதை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே பக்ஹ்வடா திட்டத்தின் குறிக்கோள் என வங்கி பொது மேலாளர் தெரிவித்து உள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், சோலார் பம்பு செட்கள், டிராக்டர்கள், சிறிய பால் திட்டம் முதலியவற்றிக்கு தேவையான நிதி, உணவு மற்றும் விவசாயம் சார்ந்த யூனிட்ஸ், சுய உதவி குழு, விவசாய பொருட்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு கடன், ஒருங்கிணைந்த பொறுப்பு குழுக்களுக்கு தேவையான கடன் போன்றவை வழங்கப்படுகின்றனர்.
பரோடா கிஸான் பக்ஹ்வடா திட்டத்தில் கடன் விண்ணப்பிக்க பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் இணையத்தளத்தில் ஆன்லைன் முறையும் இணைத்துள்ளனர்.
விவசாயம் சார்ந்த உபகரணப் பொருட்களுக்கு தேவையான கடன் உதவியை அக்டோபர் 16-ம் தேதி பேங்க் ஆஃப் பரோடா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து விவசாயிகள் வங்கிக்கு நேரில் சென்று திட்டம் பற்றிய முழு விவரங்களை அறிந்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.