வங்கிகள் அமைப்பின் போராட்டத்தால் 7 நாட்கள் வங்கிகள் செயல்படாதா ?

பரவிய செய்தி

செப்டம்பர் 26 மற்றும் 27 வங்கிகள் வேலை நிறுத்தம். 28-ம் தேதி நான்காவது சனிக்கிழமை. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. 30-ம் தேதி அரை ஆண்டு நிறைவு, அக்டோபர் 1-ம் தேதி பெரும்பாலான ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்வார்கள். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி. ஆகையால், செப்டம்பர் 25-ம் தேதிக்கு பிறகு வங்கிகள் அக்டோபர் 3-ம் தேதியே வேலை செய்யும். தொடர்ச்சியாக 7 நாட்கள் வங்கிகளில் வேலை இல்லை. செப்டம்பர் 27-ம் தேதிக்கு பிறகு பெரும்பாலான ஏடிஎம்கள் காலியாகி விடும். எனவே, முன்னெச்சரிக்கையாக கையில் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தகவலை அனைவரும் பகிரச் செய்யவும்.

மதிப்பீடு

விளக்கம்

ங்கி ஊழியர் போராட்டம், தொடர் விடுமுறைகள் என 7 நாட்கள் வங்கி பணிகள் நடைபெறாமல் இருக்கும் என்ற தகவல் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அனைத்து வங்கிகளின் பணிகளும் தொடர்ச்சியாக 7 நாட்கள் தடைப்படுமா என அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.

Advertisement

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை ஆகஸ்ட் 31-ம் தேதி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கிகள் அமைப்பு அறிவித்து இருந்தது.

வங்கி ஊழியர்கள் அமைப்பின் போராட்டங்கள் மட்டுமின்றி 28-ம் தேதி நான்காவது சனிக்கிழமை. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என விடுமுறைகள் வருகிறது. இதனால் நான்கு நாட்கள் வங்கிகளின் பணிகள் பாதிக்கப்படும். வங்கி சேவைகள் இன்றி மக்கள் அன்றாட பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்படக்கூடும் என அனைத்து ஊடகச் செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.

Advertisement

பரவும் செய்திகளில் செப்டம்பர் 30-ம் தேதி வங்கி அரை ஆண்டு நிறைவு நாள் என குறிப்பிட்டு உள்ளனர். அதனை குறித்து தேடிய பொழுது, RBI வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வங்கி கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு அக்டோபர் 1-ம் தேதியை குறிப்பிட்டு உள்ளனர். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி. ஆகையால், அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதி மட்டுமே விடுமுறை.

செப்டம்பர் 30-ம் தேதி விடுமுறை இல்லை என்பதை ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அடுத்ததாக, பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாலே வங்கி ஊழியர்கள் அமைப்பின் போராட்டம் நிகழ உள்ளது. பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஆகையால், வேலைநிறுத்தம் அனைத்து வங்கிகளுக்கும் அல்ல.

இது குறித்து தனியார் வங்கியின் ஊழியரை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களே வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தனியார் வங்கிகள் அல்ல. அன்றைய தினங்களில் தனியார் வங்கிகளின் சேவைகள் இருக்கும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

முடிவு : 

நம்முடைய தேடலில், செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் அமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளது உண்மையே. ஆனால், அது பொதுத்துறை வங்கிகளுக்கே. தனியார் வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படாது.

பொதுத்துறை வங்கிகளின் பணிகள் தடைப்படும் 4 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 30-ம் தேதி வங்கி இயங்கும். எனினும், அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் விடுமுறை என ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close