சந்திரயான் 3 குறித்து பிபிசி விமர்சித்ததாக ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த 2019ல் வெளியான வீடியோ !

பரவிய செய்தி
சந்திரயான் 3 குறித்து பிபிசி என்ன கூறுகிறது என்பதை கேளுங்கள். சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளும், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இன்னும் கழிவறை வசதி இல்லாத நிலையிலும் உள்ள இந்தியா, விண்வெளி திட்டங்களும் ஏன் இவ்வளவு செலவு செய்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
இஸ்ரோ கடந்த ஜூலை 14 அன்று சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்றுள்ள விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தின் அருகே வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன்மூலம் அதிகம் ஆய்வு செய்யப்படாத நிலவின் தென் துருவத்தின் அருகே இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்நிலையில் பிபிசி ஊடகத்தில், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளும், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இன்னும் கழிவறை வசதி இல்லாத நிலையிலும் உள்ள இந்தியா, விண்வெளி திட்டங்களுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறது என்று இந்தியர் ஒருவரிடம் நிரூபர் கேள்வி கேட்பது போன்ற 27 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் இந்த வீடியோவை மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
Listen to what BBC had to say about #Chandrayaan3
– Should India which lacks in Infrastructure and has extreme poverty, Should they be spending this much amount of money on a space program pic.twitter.com/dz28aaaS1T
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 23, 2023
Listen to what BBC had to say about Chandrayaan 3. pic.twitter.com/spd0EvqtxC
— Avinash K S🇮🇳 (@AvinashKS14) August 23, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், Videsh TV தன்னுடைய யூடியூப் பக்கத்தில் கடந்த 2019 ஜூலை 22 அன்று பரவி வரும் இதே வீடியோவை பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது.
மேலும் இந்த வீடியோ குறித்து பிபிசி-யின் பக்கங்களில் தேடியதில், “இந்த வீடியோ தற்போது வெளியிட்டது அல்ல. நான்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தற்போது நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதால், இப்போது இந்த வீடியோவை இந்தியர்கள் தவறாக பரப்பி வருகின்றனர்” என்று கூறி, கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
மேலும், BBC News Press Team தனது ட்விட்டர் பக்கத்திலும், இந்த வீடியோ குறித்து நேற்று (ஆகஸ்ட் 24), “இது 2019-இன் பழைய வீடியோ, சந்திரயான்-3 தொடர்பாக BBC வெளியிட்டுள்ள வீடியோ இதோ” என்ற தலைப்பில் தற்போது பிபிசி வெளியிட்டுள்ள வீடியோக்களின் லிங்கையும் இணைத்து பகிர்ந்துள்ளதைக் காண முடிந்தது.
This is an old clip from 2019.
The BBC’s reporting of the #Chandrayaan3 yesterday can be seen here:https://t.co/unSvuwvgTO https://t.co/z0q8nsYCp7
— BBC News Press Team (@BBCNewsPR) August 24, 2023
மேலும் அந்த வீடியோவில் பிபிசி வேர்ல்ட் செய்தி ஊடகத்தின் லோகோ உள்ளதையும் தெளிவாக பார்க்க முடிகிறது, ஆனால் இந்த சேனல் தற்போது இயங்கவில்லை. எனவே பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க: நிலவில் சந்திரயான்-3 லேண்டர் பதிக்கும் இந்திய சின்னத்தின் முத்திரை எனப் பரவும் தவறானப் புகைப்படம்!
மேலும் படிக்க: சந்திரயான்-3 வெற்றியால் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நடனமாடுவதாகப் பரவும் பழைய வீடியோ !
முடிவு:
நம் தேடலில், சந்திரயான் 3 குறித்து பிபிசி விமர்சித்ததாகப் பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல, 2019-இன் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.