சிங்கத்திடம் இருந்து குட்டிக் கரடி தப்பிக்கும் காணொளி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதா ?

பரவிய செய்தி
கரடி குட்டியின் சிறப்பான செயல்பாடு. இந்த காணொளியை படம் பிடித்தவர் கின்னஸ் ரெகார்டில் இடம் பெற்றுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
மலை சிங்கத்திடம் இருந்து தப்பிக் தண்ணீரில் விழும் குட்டிக் கரடி அங்கிருந்து தப்பிப்பதும், குட்டிக் கரடிக்கு கர்ஜிக்கச் சொல்லிக் கொடுக்க தாய்க்கரடி ஒன்று முயல்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த வீடியோ கின்னஸ் சாதனையில் இடம்பிடித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.
கரடி குட்டியின்
சிறப்பான செயல்பாடு
இந்த வீடியோ கின்னஸ் ரெக்கார்டு பதிவிற்கு சென்றுள்ளது pic.twitter.com/Oey9aMG2Uy— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) March 14, 2023
உண்மை என்ன ?
சிங்கத்திடமிருந்து குட்டிக் கரடி தப்பிக்கும் வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது, அந்த வீடியோ 1988 ஆம் ஆண்டு வெளியான L’ours (The Bear) எனும் பிரெஞ்ச் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி என அறிய முடிந்தது.
மேலும், அந்தத் திரைப்படத்திற்கோ அல்லது ஒளிப்பதிவாளருக்கோ கின்னஸ் புத்தகம் அங்கீகாரம் வழங்கியுள்ளதா எனத் தேடியபோது அப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், Guinnessworldrecords இணையதளத்தில் இத்திரைப்படம் குறித்து எந்த பதிவும் இல்லை.
அந்தத் திரைப்படத்திற்கு வேறு என்னென்ன விருதுகள் கிடைத்தன எனத் தேடியபோது, 1988 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கு பிரெஞ்ச் திரைப்படத்துறையின் தேசிய விருதான சீசர் (César) விருது வழங்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் பல விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்துள்ளது என IMDB வலைதளத்தின் மூலம் அறிய முடிகிறது.
மேலும் படிக்க : ஒரே நேரத்தில் 15 தலைவர்களை வரைந்த பெண் கின்னஸ் சாதனை படைத்ததாக தவறானச் செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழ்
மேலும் படிக்க : சூடான் மாடல் கருமையானத் தோலுக்கான கின்னஸில் இடம் பிடித்தாரா ?
இதற்கு முன்பாக, கின்னஸ் சாதனைப் படைத்ததாக பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி உள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் யூடர்ன் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறது.
முடிவு:
நம் தேடலில், கின்னஸ் சாதனையில் இடம்பிடித்ததாகப் பரப்பப்படும் சிங்கத்திடம் இருந்து தப்பிக்கும் குட்டிக் கரடியின் வீடியோ 1988ல் வெளியான பிரெஞ்ச் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி என்றும், அக்காட்சி கின்னஸ் சாதனை ஏதும் படைக்கவில்லை என்றும் அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.