2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா ?

பரவிய செய்தி

சுதந்திரத்திற்கு உயிர் நீத்த பகத் சிங்கின் சகோதரி பிரகாஷ் கயுர் 30-5-2020 இயற்கை எய்தினார். துரதிர்ஷ்டவசமாக இந்த தேசிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணம் குறித்து செய்தி சேனல்கள் மூச்சு விடவில்லை.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் உடைய சகோதரி பிரகாஷ் கயுர் மே 30-ம் தேதி இயற்கை எய்தியுள்ளார். ஆனால், இந்திய ஊடகங்கள் அவரின் இறப்பு குறித்து செய்திகளே வெளியிடவில்லை என்ற மீம் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement

பகத் சிங் சகோதரி மரணம் என்ற கீ வார்த்தைகளை கொண்டு தேடிய பொழுது, 2014-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி வெளியான இந்திய செய்திகளில் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் கனடாவில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

2014 செப்டம்பர் 28-ம் தேதி பகத் சிங் உடைய 107 வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்ட நாளில் பிரகாஷ் கயுர் கனடாவின் ப்ராம்ப்டன் பகுதியில் தன்னுடைய 93-வது வயதில் இயற்கை எய்தினார். செப்டம்பர் 29-ம் தேதி இந்திய ஊடகங்களில் அவரின் இறப்பு குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரகாஷ் கயுர் 1980களில் இருந்து கனடாவில் தன்னுடைய மகன் ரூபிந்தர் சிங் மல்கி உடன் வசித்து வந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்பாக 6 ஆண்டுகளாக உடலநலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக வாழ்ந்து வந்துள்ளார்.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில், பகத் சிங் சகோதரி 2014-ல் கனடாவில் இயற்கை எய்தி உள்ளார். அவரின் இறப்பு பற்றி செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது. ஆனால், 2020 மே 30-ம் தேதி இறந்து உள்ளதாக தவறான தகவலை பகிர்ந்து வருகிறார்கள். பிரகாஷ் கயுர் இறந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இறந்து விட்டதாக தகவல்கள் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது. தவறான தகவலை பகிர வேண்டாம்.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button