பாக்யராஜ் பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி

பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான்! ஏழு மாதத்தில் பிறந்தவர் பாக்யராஜ் என்று எம்.ஜி.ஆருக்கே தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பில் நடந்த அஜால்குஜால் சமாச்சாரங்களை எடுத்துச் சொன்னால் பாக்யராஜின் மானம் கப்பலேறும் – பயில்வான் ரங்கநாதன் .

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

ஏப்ரல் 20-ம் தேதி பாஜகவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ” பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் ” என விமர்சித்து பேசியது சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றது. இதையடுத்து, அவரின் பேச்சு கண்டனங்களை பெற அதே நாள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

வைரலாகும் நியூஸ் கார்டு குறித்து ஜூனியர் விகடன் முகநூல் பக்கத்தில் தேடுகையில், ஏப்ரல் 20-ம் தேதி இயக்குநர் பாக்யராஜ் உடைய சர்ச்சை கருத்து மற்றும் அவர் மன்னிப்பு கேட்ட செய்திகள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. மாறாக, பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

மேலும், ” விமர்சனத்துக்கும் இழிவு செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது ” என நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறிய கருத்துக் குறித்து நியூஸ் கார்டு ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அந்த நியூஸ் கார்டில் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக பரவும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader