Fact Check

ராகுல் காந்தி மது அருந்துவது போல் தவறாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி

நேற்று பப்பு ஆர்மி ~ எங்க தலிவர் எவ்வளவு எளிமையா டீ குடிக்கிறார்னு பாத்திங்களா கதறுங்கடா சங்கிகளா இன்று சங்கிஸ் ~ அடேய் கோமுட்டி தலையா எந்த ஸ்டார் ஹோட்டல்லடா இந்த டம்ளர்ல டீ குடுக்குறாங்க!? அதுசரி அந்த தட்டுல இருக்கும் சைடிஷ்க்கும் டீக்கும் எதாவது தொடர்பிருக்காடா?

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று வரும் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, அவர் மது அருந்துவதாக கீழ்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, ராகுல் காந்தி டீ அருந்துவதை தான் மது அருந்துவதாக போலியாக பரப்புகிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்த புகைப்படம் தவறானது, மது அருந்துவதே உண்மையான படம் என ஒப்பிட்டு இப்புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

ராகுல் காந்தியின் முன்பாக மது இடம்பெற்று இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” ஜனவரி 7ம் தேதி ப்ரன்ஜோய் எனும் பத்திரிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” பாரத் ஜோடோ யாத்திரையின் போது பஞ்சாப் மாநிலத்தின் கர்னல் பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள தாபாவில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக ” ராகுல் காந்தியின் முன்பாக டீ இடம்பெற்று இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்

Twitter link | Archive link 

ராகுல் காந்தி தாபாவில் டீ குடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுவையும், சிக்கன் உணவையும் வைத்து எடிட் செய்து இருக்கிறார்கள். மேலும், எடிட் செய்த படத்தையே உண்மையான படம் எனக் கூறி பரப்பவும் செய்கிறார்கள்.

மேலும் படிக்க : Image of Rahul Gandhi with a glass of alcohol and chicken is photoshopped

இதற்கு முன்பாக, ராகுல் காந்தியின் எடிட் செய்யப்பட்ட இப்படம் இந்திய அளவில் வைரலாகிய போதே யூடர்ன் ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : முன்னாள் அமைச்சர் ராகுல் காந்திக்கு “ஷூ லேஸ்” கட்டி விட்டதாக பொய் செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தமிழ் !

முடிவு : 

நம் தேடலில், இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ராகுல் காந்தி மது அருந்துவதாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. அவர் டீ குடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுவை எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.

Back to top button