பிக் பாஸ் வாக்கை மறுகூட்டல் செய்ய சட்டம் வேண்டும் என செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !

பரவிய செய்தி
ஐரோப்பாவில் உள்ள தோழர்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாக #Vikramanக்கு தான் வாக்களித்தாக கூறினார்கள் பார் முழுவதும் இப்படி தோழரின் புகழ் பரவி இருந்தும் வீழ்ந்தது எப்படி? #Bigboss போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையையும் மறு கூட்டல் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்- செந்தில்வேல்
மதிப்பீடு
விளக்கம்
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எதிர்ப்பார்த்தது போல் விசிகவைச் சேர்ந்த விக்ரமன் வெற்றிப் பெறாதது விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள தோழர்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாக விக்ரமனுக்கு தான் வாக்களித்தாக கூறினார்கள். இப்படி இருக்கையில், பிக் பாஸ் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையையும் மறு கூட்டல் செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என ஊடகவியலாளர் செந்தில்வேல் ட்விட்டரில் பதிவிட்டதாக ஸ்க்ரீன்சார்ட் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பதிவு @Senthillvel79 எனும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதிவாகி இருக்கிறது. ஆனால், இது ஊடகவியலாளர் செந்தில்வேலின் உண்மையான ட்விட்டர் பக்கம் அல்ல, போலியானது.
ஐரோப்பாவில் உள்ள தோழர்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாக #Vikraman க்கு தான் வாக்களித்தாக கூறினார்கள்
பார் முழுவதும் இப்படி தோழரின் புகழ் பரவி இருந்தும் வீழ்ந்தது எப்படி?#Bigboss போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையையும் மறு கூட்டல் செய்ய சட்டம் இயற்ற வேண்டும் pic.twitter.com/u3Xs45BpJd
— senthil (@Senthillvel79) January 22, 2023
ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் இயங்கி வரும் போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியாகும் பதிவுகளை உண்மை என பலமுறை வைரல் செய்து உள்ளனர். அதுகுறித்து நாம் கட்டுரைகளும் வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : குஜராத்தில் பாஜக வென்றால் தற்கொலை செய்வேன் என செந்தில்வேல் கூறியதாக பாஜகவினர் பரப்பும் போலி ட்வீட்
மேலும் படிக்க : உதயநிதி வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் எனச் செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !
முடிவு :
நம் தேடலில், பிக்பாஸ் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையையும் மறு கூட்டல் செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என செந்தில்வேல் கூறியதாகப் பரவும் ட்வீட் போலியான பக்கத்தில் இருந்து வெளியானது என்பதை அறிய முடிகிறது.