This article is from Oct 31, 2019

வைரலாகும் பிகில் பட வில்லன் விஜயனின் நிஜ வாழ்க்கை| அர்ஜுனா விருது பெற்றவர் !

பரவிய செய்தி

மேல இருக்குறவர் recent times ல அதிகமா வெறுக்க பட்ட ஆள், காரணம் ராயப்பன கொன்னு போடுற அலெக்ஸ் ரோலில் பிகில் படத்தில் வரும் நபர். ஆனா பலருக்கும் தெரியாது இவரு தான் நிஜ வாழ்க்கை பிகில்.

10 பைசாக்கு ஒரு சோடா விக்கும் சாதாரண தின கூலி தொழிலாளி. தனக்கு கால்பந்து மேல உள்ள மோகம் கொண்டு கஷ்டபட்டு இந்தியன் டீம் ல சேர்ந்தார். மிக ஆக்ரோஷமான forward ஆட்டக்காரர். இவரு ஆடுன நேரத்தில் ” fastest international goal ” 12 second ல அடிச்சது இவரு தான். இந்தியாக்கு இன்னும் அது ஒரு record. 3 வாட்டி “Indian player of the year” வாங்கின முதல் வீரர்.

பல பேர் இவரு இந்தியா இல்லாம வெளிநாட்டுல பிறந்து இருந்தா உலக சிறப்பு கிடைச்சு இருக்கும் னு சொல்லுவாங்க. இன்னைக்கும் கேரளா ல football காதலிக்கும் எல்லாருக்கும் ஹீரோ. ஆனா இந்திய விளையாட்டு அரங்கம் பொறுத்தவரை இவரு ஒரு unsung hero..!!

I.M.Vijayan- The pride of Indian Football

மதிப்பீடு

விளக்கம்

கால்பந்து விளையாட்டை கதை களமாகக் கொண்டு வெளியாகிய பிகில் திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக அலெக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நிஜ வாழ்க்கையில் சிறந்த கால்பந்து வீரர் எனும் தகவல்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவுகளாக பரவி வருகிறது.

Facebook post archived link  

விஜயன் குறித்து பரவும் பதிவுகளை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிவிக்குமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் பலரும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

ஐ.எம்.விஜயன் :

பிகில் படத்தில் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் வரும் ஐ.எம்.விஜயன் கேரளாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தாய் மற்றும் தந்தை இருவரும் கூலி வேலை செய்தவர்கள். சிறு வயதில் திருச்சூர் நகராட்சி மைதானத்தில் சோடாவை விற்றுக் கொண்டே இலவசமாக கால்பந்து போட்டிகளை பார்த்திருக்கிறார்.

கால்பந்து விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விஜயனுக்கு 18 வயதில் கேரளா போலீஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, கொல்கத்தா கால்பந்து க்ளப்பில் விளையாடத் துவங்கினார். 1999-ல் SAFF கோப்பை போட்டியில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றார்.

12 நொடியில் ” Fastest goal ” அடித்து சாதனை படைத்து இருக்கிறார் விஜயன். மேலும் 1993, 1997 மற்றும் 1999 என மூன்று முறை ” Indian player of the year ” விருதை பெற்றுகிறார். இவையனைத்திற்கும் மேலாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையால் கால்பந்து விளையாட்டிற்காக அர்ஜுனா விருது பெற்று உள்ளார்.

VIjayan interview video archived link 

” Black Buck “ என செல்ல பெயருடன் அழைக்கப்படும் விஜயன் தன்னுடைய ஓய்விற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். மலையாள திரைப்படங்களில் நடிக்கத் துவங்கி தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்திற்கு முன்பாக திமிரு, கொம்பன் உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்து இருக்கிறார்.

ஆகஸ்ட் 2019-ல் விஜயன் தமிழில் பேட்டி அளித்ததை காண நேரிட்டது. இதற்கு முன்பு வரை அவரின் நிஜ வாழ்க்கை குறித்து யாரும் அறிந்து இருக்கவில்லை. இந்திய கால்பந்து அணிக்காக விளையாடிய வீரர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பது வித்தியாசமாய் இருக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader