பீகாரில் யோகி ஆதித்யநாத்திற்கு கூடிய கூட்டமென பரவும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
கொள்ளை அடிக்கவேண்டும்..மக்களின் பணத்தை அல்ல..மக்களின் மனதை.கோடான கோடி மக்களின் உள்ளத்தை கொள்ளை அடித்த யோகி ஆதித்யநாத்-க்கு கூடிய கூட்டம் இது.அதுவும் பீகாரில்
மதிப்பீடு
விளக்கம்
பீகார் மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கூடிய கூட்டமெனே இப்புகைப்படம் தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கோவிட்-19 தொற்றின் பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாத இறுதியில் பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலையே நடத்த உள்ளனர்.
பீகாரில் யோகி ஆதித்யநாத் பிரச்சார பேரணிக்கு கூடிய கூட்டமென பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது 2014-ல் கொல்கத்தாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட Jana Chetana Sabha கூட்டமென அறிய முடிந்தது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி Truth by IBTL எனும் ட்விட்டர் பக்கத்தில் அப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
. EPIC “@tkparida: Look here:-
Glimpse of #NaMo‘s #JanChetnaSabha of Kolkata from Helicopter View.#NaMoInKolkata
pic.twitter.com/s5euDWMb3Y“— Truth by IBTL (@ibtlx) February 5, 2014
அதேபோல் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் தேடலில், ” The Kolkata crowd at Modi’s rally(In pictures) ” எனும் தலைப்பில் DeshGujarat.com எனும் இணையதளத்தில் வெளியான கொல்கத்தா பிரச்சாரத்தின் புகைப்படத் தொகுப்பில் இப்புகைப்படம் இடம்பெற்று உள்ளது.
முடிவு :
நம் தேடலில், 2014-ல் கொல்கத்தாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்திற்கு கூடிய மக்களின் புகைப்படத்தை 2020-ல் யோகி ஆதித்யநாத்திற்கு கூடிய கூட்டமென தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.