சென்னையில் 10 இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பாஜகவினர் கைதா ?

பரவிய செய்தி

போலீசாரிடம் சிக்கிய பாஜக திருடர்கள் ! சென்னையில் பல்வேறு பகுதிகளில் 10 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பாஜகவினர் கைது : ரூ.15 லட்சம் மதிப்பிலான 6 புல்லட், 2 பல்சர், 1 டியூக், 1 யமஹா என 10 வாகனங்கள் பறிமுதல் !

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் இரு சக்கர வாகனங்களை திருடிய 3 பாஜகவினரை போலீசார் கைது செய்ததாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Facebook link | Archive link  

கடந்த ஆண்டிலேயே, இந்த நியூஸ் கார்டை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். தற்போது தேர்தல் சமயம் என்பதால் வைரல் செய்து வருகிறார்கள். ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

Advertisement

உண்மை என்ன ?

நியூஸ் 7 சேனலின் லோகோ உடன் இருக்கும் நியூஸ் கார்டில், ” போலீசாரிடம் சிக்கிய பாஜக திருடர்கள் ” என நெருக்கமாக எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. சென்னையில் சிக்கிய பைக் திருடர்கள் குறித்து தேடிப் பார்க்கையில், ” சென்னையில் பல்வேறு பகுதிகளில் 10 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 இளைஞர்கள் நுங்கம்பாக்கத்தில் கைது ” என 2020 அக்டோபர் 3ம் தேதி வெளியான நியூஸ் 7 தமிழின் உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது.

Twitter link | Archive link 

நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தியில், பைக் திருடியவர்கள் பாஜகவினர் எனக் குறிப்பிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வேறு செய்திகள் ஏதும் கிடைக்கிறதா எனத் தேடிப் பார்க்கையில், நியூஸ் கார்டில் இடம்பெற்ற இருசக்கர வாகனங்களின் அதே புகைப்படம், கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படத்துடன் 2020 அக்டோபர் 4-ம் தேதி வெளியான புதிய தலைமுறை செய்தி கிடைத்தது.

” போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக புல்லட் வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த சஃபி(27) என்பதும், ஓட்டி வந்த புல்லட் திருடிய வாகனம் என்பதும் தெரிய வந்தது. சஃபிக்கை வைத்து இவரது கூட்டாளிகளான கேரளாவைச் சேர்ந்த சிபி(23) மற்றும் விருதுநகரைச் சேர்ந்த அமீர்ஜான்(36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் ” என செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் 10 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பாஜகவினர் கைது என பரப்பப்படும் நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button