பில்கேட்ஸ் மற்றும் அவரது மகள் உணவருந்திய கதை உண்மையா ?

பரவிய செய்தி
ஒருமுறை பில் கேட்ஸ ஹோட்டலில் உணவு அருந்திய பிறகு அங்கு உணவு பரிமாறுபவருக்கு அன்பளிப்பாக 5$ கொடுத்தார். அதை வாங்கிய அந்த பணியாளர் பில் கேட்ஸிடம் ஒரு முறை உங்கள் மகள் இங்கு வந்த போது 55$ அன்பளிப்பாக கொடுத்தார். ஆனால் நீங்கள் 5$ கொடுத்துள்ளீர்கள் என்றார். இதை கேட்டு சிரித்த பில் கேட்ஸ், அவள் உலகின் மிகப்பெரிய பணக்காரரின் மகள் . ஆனால் நான் ஒரு மரம் வெட்டுபவரின் மகன் என்று கூறியுள்ளார். கடந்து வந்த பாதையை பில் கேட்ஸ் மறக்காமல் உள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
உலக பணக்காரர் பில் கேட்ஸ் அவர்களின் மகள் என்று பரவிய புகைப்படத்தில் இருப்பவர் அமெரிக்காவின் நடிகை Rachel ஆவார்.
விளக்கம்
உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் உணவு அருந்த உணவு விடுதிக்கு சென்ற கதையை பலரும் சமூக வலைத்தளங்களில் படித்து அறிந்து இருப்பார். ஒருமுறை பில் கேட்ஸ் ஹோட்டலில் உணவு அருந்திய பிறகு அவர் அங்கு உணவு பரிமாறுபவருக்கு அன்பளிப்பாக 5$ கொடுத்தார் . அதை வாங்கியவருக்கு அதிர்ச்சி. அந்த பணியாளர் பில் கேட்ஸிடம் ஒரு முறை உங்கள் மகள் இங்கு வந்த போது 55$( சில செய்திகளில் 500 டாலர்) அன்பளிப்பாக கொடுத்தார் . ஆனால் நீங்கள் 5$ கொடுத்துள்ளீர்கள் என்றார்.
இதை கேட்டு சிரித்த பில் கேட்ஸ், அவள் உலகின் மிகப்பெரிய பணக்காரரின் மகள். ஆனால் நான் ஒரு மரம் வெட்டுபவரின் மகன் என்று கூறியுள்ளார். இவ்வாறு ஒரு கதை சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக பேசப்பட்டது. மேலும், அதனுடன் அவரின் மகள் என்று ஒரு படமும் பகிரப்பட்டது. கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது என்ற எண்ணத்தை எடுத்துரைக்கும்படி செய்தி இருந்ததால் அனைவர்க்கும் அக்கதை பிடித்து விட்டது. ஆகையால், அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.
ஆனால், உண்மையை கூறவேண்டும் என்றால் பில் கேட்ஸ் பற்றி பரவிய செய்தி முற்றிலும் தவறானது. ஏனென்றால் பில் கேட்ஸின் தந்தை ஒரு வக்கீல் ஆவார். மேலும் அவரது மகள் என்று கூறி பரப்பப்பட்ட பெண் புகைப்படம் அவரது மகளும் அல்ல. படத்தில் உள்ளவர் அமெரிக்காவின் நடிகை rachael leigh cook ஆவார் .
பில் கேட்ஸின் மகளின் பெயர் ஜென்னிபர் கேட்ஸ், இவரின் பொழுதுபோக்கு குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வது . இவர்களுக்கு என்று சொந்தமாக குதிரை பந்தய மைதானம் வைத்துள்ளார்கள் . இவரின் புகைப்படங்களை இணையத்தில் காணலாம் .
இதை அறியாமல் தவறான கட்டுக்கதைகளை இணையத்தில் இயற்றி உள்ளனர் . இணையத்தை பொறுத்தவரை பிரபலமானவர்களை சுற்றியே வதந்திகள் பரவுகின்றன .