ஈகை பண்டிகையில் விலங்குகள் பலியிடுவதற்கு ஆதரவாக பில் கேட்ஸ் ட்வீட் வெளியிட்டாரா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
முஸ்லீம்களுக்கு எதிரான தொடர் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு இடையில் பில்கேட்ஸ் அவர்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பெரிய உணவகங்களில் உணவிற்காக ஆடு, மாடுகள் பலியிடுவதையும், ஈகைப் பண்டிகையில் விலங்குகளை பலியிட்டு ஏழைகளுக்காக வழங்குவதாகவும் ஒப்பிட்டு தன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன ?
தமிழில் மொழிமாற்றம் செய்து பரவி வரும் இந்த செய்தியை பற்றி பில்கேட்ஸ் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் தேடிப் பார்க்கையில் அவர் முஸ்லிம்களை பற்றியோ, அவர்களது பண்டிகையை பற்றியோ இப்படியொரு ஒரு ட்வீட் வெளியிடவில்லை. இது கடந்த சில ஆண்டுகளாவே பகிரப்பட்டு வருகிறது.
பில்கேட்ஸ் பதிவிட்டதாக பகிரப்படும் தகவல் 2019 ஆகஸ்ட் 19-ம் தேதி @WolfieBabiee எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
I don’t want to see any tweet hating on Muslims for slaughtering animals, about 1 million animals killed each day by KFC, McDonalds, Burger King etc. too feed the rich & making hella money out of it. During Eid Muslims sacrifice them to feed the poor for Free & y’all lose ur mind
— ❦ (@WolfieBabiee) August 10, 2019
அவர் “மிருகங்களை கொல்வதற்காக முஸ்லீம் மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்யும்படியான ட்வீட்களை நான் பார்க்க விரும்பவில்லை கே.எஃப்.சி, மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் போன்றவற்றால் ஒவ்வொரு நாளும் சுமார் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்பட்டு பணக்காரர்களுக்கு உணவளிக்கின்றன. அதிலிருந்து நிறைய பணம் சம்பாதிக்கின்றன. ஆனால் ஈகை பண்டிகை சமயத்தில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு இலவசமாக உணவளிக்க மிருகங்களை தியாகம் செய்கிறார்கள்” எனும்படியான கருத்தை பதிவுசெய்துள்ளார்.
இந்த கருத்து ட்விட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற இப்பதிவே தற்போது பில்கேட்ஸ் கூறியதாக அவரின் பெயரில் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், கேஎஃப்சியில், மெக்னோடால்ஸில், பர்கர் கிங்கில் மில்லியன் கணக்கில் ஆடுகளும், மாடுகளும் பலியிட்டு நடுத்தர மக்களின் பணத்தை முதலாளிகள் பிடுங்குவதாகவும், முஸ்லீம்கள் ஈகை பண்டிகையில் பெரும் செல்வந்தர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அறுத்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர் என பில்கேட்ஸ் ட்வீட் பதிவிடவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வேறொருவர் பதிவிட்ட ட்வீட்டை பில்கேட்ஸ் கூறியதாக ஃபோட்டோஷாப் செய்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.