பிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா ?

பரவிய செய்தி

இந்தப் படத்தில் இருப்பவர்தான் ரூட்ஷெல்ட். பிரிட்டனில் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.
பிரிட்டன் அரசாங்கம்,இவரிடமிருந்து கடனாகப் பெற்று,தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு, மகா செலவந்தராக வாழ்ந்தவர். ஒருநாள் தனது பொக்கிஷங்கள் நிறைந்த, அறைக்குள் நுழைந்து, கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென வீசிய காற்றில், திறந்து வைத்த கதவுகள், திறக்க முடியாதவாறு மூடிக் கொண்டன.

அது ரகசிய அறை ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து, அதற்குள் செல்ல வேண்டும். நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார். பொக்கிஷ அறையின் சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ பூட்டிக் கொண்டது. பல நாட்கள் பசி ,பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் சுவற்றில் சில வரிகளை எழுதினார்.

“நான் உலகில் ,மிகவும் உயர்ந்த மனிதனாக,பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணிக்கிறேன்”. அவர் மரணித்துப் பல வாரங்களுக்கு பின்னரே, அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே மாட்டிக் கொண்டது தெரிய வந்தது.

மதிப்பீடு

விளக்கம்

தங்க கட்டிகள் அடிக்கி வைக்கப்பட்ட அறையில் அமர்ந்து இருக்கும் நபரின் புகைப்படத்துடன் பிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் என்பவர் தன்னுடைய செல்வங்கள் வைக்கப்பட்ட ரகசிய அறையில் சிக்கிக் கொண்டு பசியால் உயிரிழந்ததாக ஒரு உணர்ச்சியூட்டும் கதை சமூக வலைதளங்களில் சில ஆண்டுகளாகச் சுற்றி வருகிறது.

Advertisement

Facebook link | archive link

இப்படி பரவும் கதையின் உண்மைத்தன்மை குறித்தும், ரூட்ஷெல்ட் குறித்தும் விரிவாக காண்போம்.

உண்மை என்ன ? 

பிரிட்டனின் செல்வந்தர் ரூட்ஷெல்ட் குறித்து தேடுகையில், ” 1777-1836-ம் ஆண்டுகளில் வாழ்ந்து இறந்த Nathan Mayer Rothschild என்பவர் குறித்த விவரங்கள் கிடைத்தன. ஜெர்மனியைப் பூர்வீகமாக கொண்ட யூதர்களான ரூட்ஷெல்ட் குடும்பம் அரசாங்கத்தை நிர்வகிக்கும் அளவிற்கு கடன் உதவி அளித்தவர்கள் மற்றும் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.

Advertisement

அக்குடும்பத்தைச் சேர்ந்த Nathan Mayer Rothschild பிரிட்டனில் பங்குச் சந்தை மற்றும் வங்கி வர்த்தகத் துறையில் புகழ்பெற்று இருந்தார். family.rothschildarchive.org எனும் இணையதளத்தில் Nathan Mayer Rothschild உடைய ஓவிய படத்துடன் 1836-ம் ஆண்டில் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. தங்க கட்டிகள் அடிக்கி வைக்கப்பட்ட அறையில் உயிரிழந்ததாக கூறுவது போல் எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

www.rothschildarchive.org எனும் குடும்ப ஆவண இணையதளத்தில் ” Abscess ” எனும் பாதிப்பால் Nathan Rothschild உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வைரலாகும் புகைப்படம் குறித்து தேடுகையில், walmart.com உள்ளிட்ட பல புகைப்பட விற்பனை தளங்களும் இப்புகைப்படத்தை விற்பனை செய்து வருகின்றன. எனினும், இப்புகைப்படத்தின் ஆரம்பம், புகைப்படத்தில் இருப்பவர் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

முடிவு : 

நம் தேடலில், பிரிட்டனில் நாதன் ரூட்ஷெல்ட் எனும் செல்வந்தர் இருந்துள்ளார். ஆனால், அவர் தன்னுடைய தங்க கட்டிகள் நிறைந்த ரகசிய அறையில் சிக்கி உயிரிழந்ததாகவும், இறப்பதற்கு முன்பாக எழுதிய வாக்கியம் எனப் பரப்பப்படுவது முற்றிலும் வதந்தியே. அக்கதையுடன் பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர் ரூட்ஷெல்ட் அல்ல. இது முற்றிலுமாக உருவாக்கப்பட்ட போலிக் கதை என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button