பின்லேடன் குற்றவாளி இல்லை-சிஐஏ | கேலி செய்தி வைரல் ஆகியது எப்படி ?

பரவிய செய்தி

அமெரிக்க இரட்டை வர்த்தக கோபுர தாக்குதலுக்கும், பின்லேடனுக்கும் சம்பந்தமில்லை. மன்னிப்பு கோரிய அமெரிக்க உளவுத்துறை.

மதிப்பீடு

சுருக்கம்

அமெரிக்காவில் வெளியாகும் தி ஆனியன் என்ற செய்தியில் வெளியானதை உண்மை என நினைத்து இந்தியாவில் காஷ்மீர் முதல் தமிழகம் வரையில் பகிரப்பட்டு வருகிறது. தி ஆனியன் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விளக்கம்

2019 ஜனவரி 9-ம் தேதி தி ஆனியன் என்ற இணையதளத்தில் ” CIA Issues Posthumous Apology After New Evidence Clears Osama Bin Laden Of Involvement In 9/11 Attacks ” என்ற தலைப்பில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் சம்பந்தமில்லை என்றும், அதற்காக அமெரிக்க உளவுத்துறை மன்னிப்பு கோரியதாகவும் செய்தி வெளியாகியது.

Advertisement

இதனை அடிப்படையாக வைத்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இயங்கும் வாரப் பத்திரிக்கையான காஷ்மீர் பென் ஆனது தி ஆனியன் இணையதளத்தில் வெளியானதை மறுப்பதிவு செய்து இருந்தது. பின் அந்த செய்தி இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஐந்து மாதங்கள் ஆகிய நிலையில் அச்செய்தி காஷ்மீரில் தொடங்கி தமிழகம் வரையில் பரவி உள்ளது.

இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும், பின்லேடனுக்கும் சம்பந்தமில்லை என்ற செய்தியின் ஆரம்பம் “தி ஆனியன்” இணையதளத்தில் இருந்தே ஆரம்பித்தது. ஆனால், தி ஆனியன் இணையதளம் பற்றி பலரும் அறியாமல் உள்ளனர்.

தி ஆனியன் :

சிகாகோவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தி ஆனியன் பத்திரிகை, சர்வதேச, தேசிய மற்றும் உள்ளூர் செய்திகள் வரையில் அவற்றை பற்றி நையாண்டித்தனமாக அல்லது பகடி கட்டுரையை வெளியிடும் இணையதளமாகும்.

Advertisement

அவற்றின் செய்திகள் உண்மையற்றதாக மட்டுமில்லை, கற்பனை உடன் இணைத்த வேலைகளாக இருக்கும். தி ஆனியன் தளத்தின் ” About us ” குறிப்பில் அவர்களின் நையாண்டித்தனத்தை அறிந்து கொள்ள முடியும்.

ஜனவரியில் வெளியான கட்டுரையில், 9/11 தாக்குதலில் அல்-கொய்தாவின் முன்னாள் தலைவருக்கு எந்தவித சம்பந்தமில்லை என ஆதாரங்கள் தெளிவாக காண்பிப்பதாகவும், பின்லேடன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சிஐஏ இயக்குனர் ஜினா ஹாப்செல் வருத்தத்துடன் கூறியதாக குறிப்பிட்டு இருந்தது. மேலும், அவரின் மரணத்திற்கு $18 மில்லியன் டாலரை சிஐஏ வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டது.

தி ஆனியன் எனும் நையாண்டிக்காரர்களை பற்றி அறியாத மக்கள் அவற்றில் வரும் செய்தியை உண்மை என அறிந்து பல மொழிகளில் பகிர்ந்து வைரல் ஆக்கி விடுகின்றனர். பின்லேடன் பற்றி சமீபத்தில் தமிழில் பரவும் செய்தி உண்மை இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொண்டீருப்பீர்கள் !

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button