This article is from Dec 02, 2021

பிறந்தநாள் கொண்டாட்டம் இறந்தநாளாக மாற்றியது எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

பக்குவமில்லாத இன்றைய இளைஞர்களின் முட்டாள்தனமான தனது நண்பர் பிறந்தநாளை இறந்த நாளாகிய இன்றைய படித்த இளைஞர்கள் கிரீம் நாசியில் ஏறி மூச்சு நின்றுவிட்டது.

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

இரவு நேரத்தில் சாலையோரத்தில் நண்பரின் பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடும் இளைஞர்கள் முகத்தில் கேக் பூசுவது, அடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அந்த இளைஞரின் நாசியில் கேக் அடைத்து இறந்து விட்டதாக 3 நிமிட வீடியோ காட்சி ஒன்று எச்சரிக்கையுடன் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link  

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோ கீழ் ஒரிஜினல் போஸ்ட் என முகநூல் பரிந்துரை செய்யும் லிங்கில் சென்று பார்க்கையில், 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸ் கொண்ட ஹம்சா நந்தினி எனும் முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ 2020 மார்ச் 2-ம் தேதி பதிவாகி இருக்கிறது.

Facebook link 

வீடியோ குறித்த பதிவில், ” பார்த்ததற்கு நன்றி! இந்தப் பக்கத்தில் சித்தரிக்கப்பட்ட நாடகங்கள் மற்றும் கேலிக்கூத்துகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். இந்த குறும்படங்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே ! ” எனக் கூறப்பட்டுள்ளது. வீடியோவின் இறுதியிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது.

இப்படி மக்களின் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் இந்த முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவாகி இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் பலரும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் வெட்டிய பிறகு முகத்தில் பூசுவது, கேக் மீது தலையை வைத்து அமுக்குவது, கடுமையாக அடிப்பது உள்ளிட்ட செயல்களை(Birthday Bumps) கொண்டாட்டமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு கொண்டாட்டம் எனக் கருதி அடித்து விளையாடும் செயலால் மோசமான நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. அதுதொடர்பான விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் சென்றடைய வேண்டும்.

முடிவு : 

நம் தேடலில், இளைஞர்கள் நண்பரின் பிறந்தநாளை மோசமாக கொண்டாடிய போது கேக் கிரிம் நாசியில் ஏறி மூச்சு நின்றுவிட்டதாக பரவும் வீடியோ விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்ட சித்தரிப்பு வீடியோவே. அது விழிப்புணர்வு வீடியோ எனக் குறிப்பிடாததால் உண்மையெனப் பகிர்ந்து வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader