பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு தடை என்றாரா அண்ணாமலை ?

பரவிய செய்தி
பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு நிரந்தர தடை. ஞாயிறு மட்டுமே அசைவத்திற்கு அனுமதி – அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ” பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும், அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அசைவத்திற்கு அனுமதி அளிக்கப்படும் ” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ் 7, தந்தி, ஜூனியர் விகடன் உள்ளிட்ட பல முன்னணி சேனல்களின் நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
எப்ப பார்த்தாலும் மாட்டு குண்டிக்கு பின்னாலயே அலையிறிங்களேடா எப்ப தாண்டா மனிதனுக்கான அரசியல் பேசுவிங்க..#மயிரிலும்_மலராது_தாமரை pic.twitter.com/LVbfigkP1e
— Ex_MLA_Candidate (@Tamilithayan) February 18, 2022
அப்படியா? அப்படியே கறி சாப்பிடாத எல்லாருக்கும் பூணூல் குடுப்பியா மலை? 😂 pic.twitter.com/cLnUKRbsPZ
— N I R M A L (@TeamBlackandRed) February 18, 2022
அதுமட்டுமின்றி, தமிழக பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும் போஸ்டரிலும் அவ்வாறான கருத்து இடம்பெற்றுள்ளதாகவும் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
8மாத காலத்தில் திமுகவின் ஒரே சாதனை, பொய்யை மட்டுமே சொல்லி தொடர்ந்து ஆட்சியில் இருப்பது தான் ..
– மாநில தலைவர் திரு.@annamalai_k #Vote4BJP #தமிழகமெங்கும்_தாமரை pic.twitter.com/oXG3PE2UmP
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 17, 2022
வைரல் செய்யப்படும் செய்தியில் இடம்பெற்றுள்ள தமிழக பாஜகவின் போஸ்டரை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், பிப்ரவரி 18-ம் தேதி ” 8 மாத காலத்தில் திமுகவின் ஒரே சாதனை, பொய்யை மட்டுமே சொல்லி தொடர்ந்து ஆட்சியில் இருப்பது தான் – மாநில தலைவர் அண்ணாமலை ” என வெளியான போஸ்டரில் வைரல் செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.
பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு நிரந்தர தடை என போலியான செய்தி பரப்பப்பட்டு வருவதாக தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் சிடிஆர்.நிர்மல் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Fake news by #tn_pappu_uday team..@news7tamil @annamalai_k pic.twitter.com/HtGJaoEhmD
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) February 18, 2022
திமுகவை விமர்சித்து அண்ணாமலை பேசி இருந்த நிலையில், மாட்டிறைச்சிக்கு தடை என்ற போலியான செய்தியை முன்னணி ஊடகங்களின் நியூஸ் கார்டுகளில் எடிட் செய்ததை திமுக ஆதரவாளர்கள் பலரும் பகிர்ந்து வந்துள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு நிரந்தர தடை, ஞாயிறு மட்டுமே அசைவத்திற்கு அனுமதி என தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் அனைத்தும் போலியாக எடிட் செய்யப்பட்டவை என அறிய முடிகிறது.