பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டில் அண்ணாமலை வாக்கு சேகரித்தாரா ?

பரவிய செய்தி
சென்னையில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்ட் என்பது கூட தெரியாமல் காலில் விழுந்து வாக்கு சேகரித்ததை பொது மக்கள் குழப்பத்துடன் கண்டுகளித்தனர்.
மதிப்பீடு
விளக்கம்
சென்னை மாநகராட்சியில் தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளரே நிற்காத வார்டில் சென்று காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக நியூஸ் 7 தமிழ் சேனல் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிகர் இல்லாத ஊர்ல ஜெயக்குமார் வாழ்ந்த மாதிரி
கலவரம் இல்லாத ஊர்ல அமீத்ஷா வாழ்ந்த மாதிரி
உண்மையை பேசுற ஊர்ல மோடி வாழ்ந்த மாதிரி
ஊழல் இல்லாத நாட்டுல பழனிச்சாமி வாழ்ந்த மாதிரிபிஜேபி இல்லாத ஊர்ல பிரச்சாரம் செய்து ஆளே இல்லாம பெல் அடிச்சிருக்கு ஆட்டுக்குட்டி பயபுள்ள 😂@annamalai_k pic.twitter.com/iVoqWBdkbE
— ராஜலிங்கம் (@rajalingam1010) February 11, 2022
உண்மை என்ன ?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டில் வாக்கு சேகரித்ததாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து நியூஸ் 7 தமிழ் முகநூல் பக்கத்தில் தேடுகையில், அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவில்லை.
பிப்ரவரி 11-ம் தேதி, ” நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; சென்னை மாநகராட்சி 55வது வார்டில் பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலை தோசை சுட்டு பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார் ” என நியூஸ் 7 தமிழ் முகநூல் பக்கத்தில் நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்ட் என்பது கூட தெரியாமல் காலில் விழுந்து வாக்கு சேகரித்ததாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.