தமிழ்நாட்டிற்கு நிதி பங்கீடு கிடைக்க விடமாட்டேன் என அண்ணாமலை கூறியதாக எடிட் செய்தி !

பரவிய செய்தி
திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு என்று ஒன்று கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டேன் – அண்ணாமலை அதிரடி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜகவின் தலைவரான அண்ணாமலை, ” திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு என்று ஒன்று கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டேன் ” என அதிரடியாக கூறியதாக கதிர் நியூஸ் உடைய செய்தி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு நிதி பங்கீடு கிடைக்க விடமாட்டேன் என எங்கும் பேசவில்லை, வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், கதிர் நியூஸ் முகநூல் பக்கத்தில் வேறு செய்தியே வெளியாகி இருந்தது.
செய்தி கார்டில், ” 1972’ல் இருந்து காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்து குளிர் காய்ந்த ஒரே கட்சி தி.மு.க – அண்ணாமலை அதிரடி ! ” என்றே இடம்பெற்று இருக்கிறது. ஆக, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என அறிய முடிகிறது.
பொய் பரப்புரையை நம்ப வேண்டாம்!
– மாநில தலைவர் திரு.@annamalai_k pic.twitter.com/WNhFt1EGLY
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 6, 2021
பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக போலி நியூஸ் கார்டு குறித்து தமிழ்நாடு பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.