அண்ணாமலையை தன்பால் ஈர்ப்பாளராக சித்தரித்து விகடன் பெயரில் பரப்பப்படும் போலிச் செய்தி !

பரவிய செய்தி

‘திடீர் மாநிலத்தலைவர்’ மீது பாரம்பரிய ஆன்மீக ஆட்கள் அதிருப்தியில் இருப்பதற்குக் காரணம் என்ன என்று விசாரித்தபோது ஜிலீர் ரக தகவல்களாகக் கொட்டுகின்றன. காதலர் தினக் கொண்டாட்டங்களையே கடுமையாக எதிர்க்கக்கூடிய ஒரு கட்சியில் தன்பால் ஈர்ப்பை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அதுவும் இது தனிப்பட்ட வாழ்க்கையின் பாலியல் தேர்வாய் இருந்தாலும் பரவாயில்லை. கட்சிக்குள்ளேயே கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் புயலிலிருந்து தன் தலைமையின் கீழ் பணிபுரியக்கூடிய இளைஞர்கள் வரை பலருடன் பாத்தி கட்டி விளையாடி வருகிறாராம் இந்த விவசாயி.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களின் பாலியல் லீக் வீடியோக்கள், ஆபாச பேச்சு ஆடியோக்கள் எனத் தொடர் சர்ச்சையில் சிக்கி வருவதால் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், திடீர் மாநிலத் தலைவர் தன்பால் ஈர்ப்புக் கொண்டவர் என்றும், இதனால் அவருக்கு எதிராக உட்கட்சி ஆட்களே எதிராக இருப்பதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கர்நாடகா பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவையும் குறிப்பிட்டு விகடனின் கட்டுரை ஒன்று ஸ்க்ரீன்சார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த செய்தியின் ஸ்க்ரீன்சார்ட் பக்கத்தை, தீவிர ஆதரவாளராக இருந்து பாஜகவில் இருந்து விலகிய சத்யபிரபு சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ? 

அண்ணாமலை பற்றி பரப்பப்படும் செய்தி குறித்து ஜூனியர் விகடன் தளத்தில் தேடுகையில், அவ்வாறான செய்திக் கட்டுரையோ அல்லது மிஸ்டர் கழுகார் போன்ற பிரிவுகளிலோ அப்படி எந்த பதிவும் கிடைக்கவில்லை.

Twitter link | News link 

சமீபத்தில் டிசம்பர் 31ம் தேதி, ” மத்திய அரசால், தமிழக அரசு 2023-ல் ரூ.1,000 கோடி சேமிக்கும்” – கணக்கு சொல்லும் அண்ணாமலை ” எனும் தலைப்பில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை குறித்த கட்டுரை மட்டுமே விகடனில் வெளியாகி இருக்கிறது.

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விகடனில் வெளியான கட்டுரையில், இதுபோன்ற போலியான செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஜூனியர் விகடனின் ஆசிரியர் கலை செல்வன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், ” அண்ணாமலை பற்றி பரவும் அந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இதேபோல் தொடர்ந்து பல போலியான செய்திகளுக்கு எங்களது கார்டுகளை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க : அமெரிக்காவில் 5,000 கோடி முதலீடு.. அண்ணாமலை பற்றி திமுகவினர் பரப்பும் ஜூனியர் விகடனின் எடிட் பக்கம்!

இதற்கு முன்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை 5,000 கோடி முதலீடு செய்யவே அமெரிக்காவிற்கு சென்றதாக ஜூனியர் விகடனில் செய்தி வெளியாகியதாக எடிட் செய்த பக்கம் வைரலாகியது குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம் தேடலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தன்பால் ஈர்ப்பு கொண்டவர் என விகடன் கட்டுரை வெளியிட்டதாக பரப்பப்படும் செய்தி பக்கம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader