நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பாஜகவில் இணைந்ததாகப் பரப்பப்படும் தவறான தகவல் !

பரவிய செய்தி

காளியம்மாள் அதிமுல போய் சேரும்ணு நெனச்சா, பிஜேபில போய் சேர்ந்திருக்கு!

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் பாஜகவின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்றதாகவும், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாகவும் கூறி காளியம்மாள், அலிஷா அப்துல்லா, பாஜகவின் சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் உணவு உண்ணும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மார்ச் 17ம் தேதி அலிஷா அப்துல்லா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதில், இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நான் பெண்களை ஆதரிப்பேன், துணை நிற்பேன், அதுவே என் பொறுப்பும் & கடமையும் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link

மார்ச் 17ம் தேதி நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘அமிதி குளோபல் பிசினஸ் ஸ்கூல்’ (AMITY GLOBAL BUSINESS SCHOOL, CHENNAI) சார்பாக வழங்கப்படும் புதுமைப் பெண் 2023 விருதுக்கு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பளர் பி.காளியம்மாள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று 17.03.2023 மாலை 3.30 மணியளவில் சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள அந்நிறுவன அரங்கில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் விழாவில் நாம் தமிழர் உறவுகள் திரளாக உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ” எனப் பதிவிடப்பட்டு உள்ளது.

Twitter link | Archive link 

விருது நிகழ்வில் சமூக ஆர்வலர் பிரிவில் காளியம்மாளுக்கும், தேசிய பந்தய வீராங்கனை பிரிவில் அலிஷாவிற்கும் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதில், பத்திரிக்கையாளர் பிரிவில் அசோக வர்ஷணி பெயரும் இடம்பெற்று இருக்கிறது. 

மேலும் படிக்க : சீமான், காளியம்மாள் பற்றி அவதூறாக எடிட் செய்து போலிச் செய்தி பக்கத்தை பரப்பும் திமுகவினர் !

இதற்கு முன்பாக, நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் குறித்து அவதூறாகவும், போலியாகவும் எடிட் செய்யப்பட்ட செய்தி பரப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம் தேடலில், நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பாஜகவின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்றதாகவும், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாகவும் பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த புகைப்படங்கள் அமிதி குளோபல் பிசினஸ் ஸ்கூல் சார்பாக வழங்கப்பட்ட விருது நிகழ்வில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Back to top button