This article is from Feb 18, 2019

பிஜேபி & காங்கிரஸ் ஆட்சியில் இறந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை.

பரவிய செய்தி

காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் 171 ராணுவ வீரர்கள் மரணம். ஆனால், பிஜேபியின் 4 ஆண்டுகள் ஆட்சியில் 1250 ராணுவ வீரர்கள் மரணம்.

மதிப்பீடு

சுருக்கம்

காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியில் இராணுவ வீரர்கள் இறப்பு எண்ணிக்கை பற்றிய பரவும் தரவுகள் தவறானவை. தாக்குதலில் இறந்த பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை விரிவாக அட்டவணை இடப்பட்டுள்ளது.

விளக்கம்

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு வைரலாகும் பதிவுகளில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியில் இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவலும் ஒன்று. 2004-2014 காங்கிரஸ் ஆட்சி மற்றும் 2014 முதலான பிஜேபி ஆட்சியில் நடந்த தாக்குதல் சம்பவங்கள், இறப்புகள் பற்றி விரிவாக காண்போம்.

வீரர்கள் மரணம் :

1994-2019-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த மொத்த தாக்குதல்களில்  25,278 மக்கள் இறந்துள்ளனர். இதில், இறந்த பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 10,226 மற்றும் இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 31,860 (புல்வாமா தாக்குதலுக்கு முன்பு வரை).

இந்தியாவில் நிகழும் பயங்கரவாத தாக்குதல்கள் ஒன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகம் நிகழும், மற்றொரு மாவோயிஸ்ட்கள் மூலம் அதிகம் நிகழும்.

2004 முதல் 2014 வரையில் இந்தியா முழுவதும் தாக்குதலில் இறந்த பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை கீழே அட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளது. 2014 வரையில் இறந்த மொத்த வீரர்களின் எண்ணிக்கை 3,529 பேர்.

2014-2019 வரையிலான பிஜேபி ஆட்சியில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை பற்றியும் கீழே அட்டவணையில் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. 2015 முதல் இறந்தவர்களின் எண்ணிக்கை 690 பேர்(புல்வாமா தாக்குதல் முன்பு வரை)

மேலும் படிக்ககடந்த 4 ஆண்டில் தீவிரவாதியான காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை தெரியுமா ?

இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலுக்கு அடுத்ததாக இந்திய வீரர்கள் இறக்கும் பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியில் காஷ்மீர் மாநிலத்தில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை பற்றி ஆண்டுதோறும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும்.

காங்கிரஸ் (ஆண்டு)

வீரர்கள் இறப்பு எண்ணிக்கை

2004

281

2005

218

2006

168

2007

121
2008

90

2009

78

2010

69

2011

30

2012

17
2013

61

2014

51

மொத்தம்

1184 பேர்

 

பிஜேபி ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை(புல்வாமா தாக்குதலுக்கு முன்பு வரை).

பிஜேபி  (ஆண்டு)

வீரர்கள் இறப்பு எண்ணிக்கை

2015

41

2016

88

2017

83

2018

95

2019

2

மொத்தம்

309 பேர்

காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியில் இறந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை குறித்த சமூக வலைதளத்தில் பரவும் விவரங்கள் இந்தியாவில் நிகழ்ந்த மொத்த எண்ணிக்கையிலோ அல்லது ஜம்மு காஷ்மீரில் இறந்த வீரர்களின் எண்ணிக்கையுடனோ ஒற்றுமையாக இல்லை.

2014-ல் பிஜேபி கட்சி  தன் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரவாத தாக்குதல் இல்லாத இந்தியா உருவாகும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இறந்த பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்துள்ளது. மேலும், ஆட்சி முடியும் தருவாயில் புல்வாமா தாக்குதல் மிகப்பெரிய அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இந்தியாவில் தாக்குதல்களில் இறந்த வீரர்களின் எண்ணிக்கையை கூறியுள்ளோம். இதன் அடிப்படையில், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader